லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி.. டிரிக்கராகி கழுத்தில் பாய்ந்த தோட்டா.. மருமகள் பலி!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண் தோட்டா பாய்ந்து பலியானார்.

ஹர்தாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா குப்தாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

ராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா? ராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா?

இந்த நிலையில் ராஜேஷ் குப்தாவின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க ராதிகா குப்தா ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அந்த பெரிய துப்பாக்கியுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முனை கழுத்தில் படும்படி வைத்திருந்தார்.

துப்பாக்கி டிரிக்கர்

துப்பாக்கி டிரிக்கர்

மேலும் துப்பாக்கியின் டிரிக்கரில் விரல்களை வைத்து கொண்டு செல்பி எடுக்க முயன்றார். அப்போது தவறுதலாக டிரிக்கரை அழுத்தியதால் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அழைத்து சென்றனர்.

மருத்துவர்கள் உறுதி

மருத்துவர்கள் உறுதி

அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜேஷ் குப்தா அந்த பகுதியில் சிறிய நகைக் கடை நடத்தி வருகிறார். அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி துப்பாக்கி வைத்திருந்தவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர். எல்லாரையும் போல் ராஜேஷ் குப்தாவும் தனது துப்பாக்கியை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருந்தார்.

துப்பாக்கிகள்

துப்பாக்கிகள்

தேர்தல் முடிந்ததால் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிகள் அவர்களது உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷ் குப்தாவின் துப்பாக்கியை அவரது மகன் ஆகாஷ் வாங்கி கொண்டு வந்து வீட்டில் இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் வைத்திருந்தார்.

மருத்துவமனை

மருத்துவமனை

அப்போதுதான் ராதிகா அந்த துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். திடீரென துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ராதிகா கழுத்தில் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்திருந்தார். அவரது செல்போன் கேமராவும் செல்பி மோடில் இருந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டார்.

கொலை முயற்சியா

கொலை முயற்சியா

இவர் பயன்படுத்திய துப்பாக்கி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் துப்பாக்கியால் சுட்ட காயம் மட்டுமே உள்ளது என்றும் மற்றபடி அவரை யாரும் கொல்ல முயற்சிக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆகாஷ் கூறுகையில் நான் கொண்டு வந்த துப்பாக்கியை பார்த்தவுடன் ராதிகா மகிழ்ச்சியடைந்தார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

அந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் செல்பி எடுக்க முயன்ற போதுதான் தோட்டா வெளியேறி அவர் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். எனினும் ராதிகாவின் தந்தை வரதட்சிணை கொடுமையால் தனது மகள் கொல்லப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

English summary
Uttar Pradesh Woman died after she tries to take selfie with holding a gun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X