பொய்யாக பலாத்கார புகார் தந்த பெண்.. 4 வருடம் ஜெயில் + ரூ.5 லட்சம் ஃபைன்.. போட்ட நீதிமன்றம்! பரபரப்பு
லக்னோ: இளைஞர் ஒருவர் மீது பொய்யாக பாலியல் புகார் கொடுத்த 21 வயது பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை பரேலி நீதிமன்றம் வழங்கி உள்ளது.
2019 இல் பதிவு செய்யப்பட்ட கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததற்காக 21 வயது பெண்ணுக்கு பரேலியில் உள்ள நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதித்தது. அவரது தண்டனைக் காலம் - நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் ஆறு நாட்கள் ஆகும்.

என்ன நடந்தது?: 2019ல் இந்த பலாத்கார புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண் இளைஞர் மீது பலாத்கார புகார் வைத்துள்ளார். தன்னை அந்த இளைஞர் கடத்தி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அந்த பெண்ணிடம் மீண்டும் விசாரணை செய்யப்பட்டது.
இந்த விசாரணையில் அந்த பெண் சாட்சியங்களை மாற்றி மாற்றி கூறியுள்ளார். முதலில் சொன்ன விஷயங்கள் பலவற்றை மாற்றி பேசி உள்ளார். அதேபோல் அந்த இளைஞரும் சம்பவம் நடந்த நேரத்தில் வேறு இடத்தில் இருந்துள்ளார்.
மாற்றி பேசினார்: இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் சுனில் பாண்டே, "கோர்ட் விசாரணையின் போதும், போலீஸ் நடத்திய குறுக்கு விசாரணையின் போது அந்த பெண் முன்பு கூறியதை மாற்றி மாற்றி பேசினார். தொடர் விசாரணையில் தான் சொன்னது பொய் என்று ஒப்புக்கொண்டார்.
அந்த வாலிபர் தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுவதை அவர் பொய் என்று ஒப்புக்கொண்டார். அவரை பழி வாங்க வேண்டும் என்று பொய்யாக புகார் கொடுத்ததாக அந்த பெண் ஒப்புக்கொண்டார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சிறையில் சில காலம் இருந்த அந்த இளைஞர் விடுதலை செய்யப்பட்டார். ஐபிசி பிரிவு 195 (ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கும் நோக்கத்துடன் தவறான ஆதாரங்களை வழங்குதல் அல்லது புனையுதல்) கீழ் நீதிமன்றம் பெண்ணை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
தண்டனை; முன்னதாக பலாத்கார வழக்கில் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்ட அதே தண்டனை தற்போது அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 25 வயது இளைஞன் சிறையில் இருந்த அதே நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் ஆறு நாட்கள் சிறை தண்டனையாக அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்த பெண்ணுக்கு ரூ.5.88 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற விதியுடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தொகையை வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்ற நபருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அபராதம் 5,88,822.47 ரூபாய் உத்தர பிரதேச அரசு விதியின்படி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. திறமையற்ற தொழிலாளர்களுக்கு உத்தரபிரதேச அரசு நிர்ணயித்த தினக்கூலியின் அடிப்படையில் இந்த அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞர் சுனில் பாண்டே தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications