ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே? கேட்கிறது வாரணாசி கோர்ட்
லக்னோ: சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி பகுதியில் இந்து தெய்வங்களை 1993-ம் ஆண்டு வரை வழிபட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏகே விஷ்வேஷ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதி. இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் சிருங்கார் கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியை ஆய்வு செய்து வீடியோ பதிவு எடுக்க உத்தரவிட்டது.

வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் மேல்முறையீடு செய்தது. ஆனால் இம்மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை உச்சநீதிமன்றம், வாரணாசி நீதிமன்றத்துக்கே அனுப்பியது. அதாவது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் விசாரணை நடத்திய வாரணாசி நீதிமன்றம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தின் சிருங்கார் கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும் அறிவித்தது.
அத்துடன் ஞானவாபி மசூதி வளாகத்தில் 1993-ம் ஆண்டு வரை இந்து தெய்வங்களை வழிபாடு செய்ததற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்ற நீதிபதி ஏகே விஷ்வேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.இது தொடர்பாக இந்து பெண்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் ஹரி சங்கர் ஜெயின் உள்ளிட்டோர், ஞானவாபி மசூதியின் பல இடங்களில் 1993-ம் ஆண்டு வரை இந்து தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆணங்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்வோம் என்றனர்.
காசி விஸநாதர் ஆலயத்தின் அருகே இந்து ஆலயம் இருந்தது; அதனைத்தான் மன்னர்கள் இடித்துவிட்டு ஞானவாபி மசூதியாக கட்டி இருக்கின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதேபோல் அயோத்தி பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என கூறி அது சட்டவிரோதமாக இடிக்கப்பட்டு நாட்டில் ரத்த ஆறு ஓடியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications