Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடங்காத ஆசை.. அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. அதிரவைத்த "லைவ்" சீன்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஏடாகூடமாக சிக்கிவிட்டார் சங்கீதா.. இப்போது அழுதுகொண்டேயிருக்கிறாராம்.. யார் இந்த சங்கீதா? அதென்ன வீடியோ?

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம் பிகாபூர் தொகுதியில் தண்டமாவ் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் ஒருஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

Where was the Government School Headmaster Beautician video taken and Who is this Uttar Pradesh Sangeetha

கண்ணாடி: இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பெயர் சங்கீதா சிங்.. ஸ்கூலுக்கு வரும்போதே ஃபுல் மேக்கப்பில்தான் வருவாராம்.. அதேபோல, பணி நேரத்திலும்கூட எப்ப பார்த்தாலும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டே இருப்பாராம்..

இவருக்கு பியூட்டி கான்சியஸ் அதிகம் என்பதால், மேக்கப், ஹேர்ஸ்டைல் போன்றவற்றுக்கு நிறைய முக்கியத்துவம் தந்துவந்துள்ளார்.. இதனால், சிலசமயம், கிளாஸ் ரூம்களுக்கு சென்று பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது கிடையாதாம். தலைமை ஆசிரியையாக இருந்தாலும்கூட, தனது பொறுப்பில் உள்ள பாட வேளைகளில் வகுப்புகளுக்கு செல்வதும் கிடையாது..

தவிப்பில் ஆசிரியர்கள்: வகுப்பில் பாடம் நடத்த தலைமை ஆசிரியை வராததால், அந்த வகுப்பு மாணவர்களும் ஓவராக கத்தி கூச்சலிட்டு விளையாடி கொண்டேயிருப்பார்களாம்.. இந்த வகுப்பு மாணவர்களின் இரைச்சல் அதிகமாகிவிட்டதால், மற்ற வகுப்புகளிலும் தொந்தரவு ஏற்பட்டது.. இதர வகுப்புகளிலும் பாடம் எடுக்க முடியாமல் சக ஆசிரியர்கள் தவித்தனர்.

இதனால், தலைமை ஆசிரியை சங்கீதாவுக்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார் அதே பள்ளியில் பணிபுரியும் உதவியாசிரியை அனம் கான் என்பவர்.. சங்கீதா மேக்கப் போடுவதை, ரகசியமாக வீடியோ பதிவு கொண்டால், அதை ஆதாரமாக வைத்து புகார் தரலாம் என்றும் அனம் கான் முடிவு செய்தார்.. தன்னுடைய இந்த ஐடியாவை, மற்ற டீச்சர்களிடம் சொல்லவும், அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள்..

சமையலறை:
சம்பவத்தன்று, வழக்கம்போல் சங்கீதா ஸ்கூலுக்கு வந்தார்.. வழக்கம்போல் வகுப்புக்கு செல்லாது, நேராக ஸ்கூலில் உள்ள கிச்சனுக்குள் நுழைந்தார்.. சமையலறைக்குள் ஒரு பியூட்டிஷியனை தன்னுடனேயே அழைத்து வந்திருந்தார் சங்கீதா.. கிச்சனில் ஃபேஷியல் போட்டுக்கொள்ளவும் ஆரம்பித்தார்..

முகமெல்லாம் க்ரீம்களை தடவிக்கொண்டு, ஃபேஷியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் சங்கீதா.. அப்போது எல்லா டீச்சர்களும் திடீரென கிச்சனுக்குள் நுழைந்து சுற்றிவளைத்ததை பார்த்து சங்கீதா அதிர்ந்து போனார்.. அதே கிச்சனில், அனம் கான் கேமராவில் தன்னை வீடியோ எடுத்து கொண்டிருப்பதை பார்த்து சங்கீதா, அதற்குமேல்அதிர்ச்சி அடைந்தார்... அந்த வீடியோவில் சங்கீதாவின் முழுமுகமும் தெளிவாக பதிவாகிவிட்டது.

வீடியோ: தனக்கு கீழ் வேலைபார்க்கும் எல்லா டீச்சர்களும் ஒன்றுசேர்ந்து தன்னை வீடியோ எடுப்பதை, சங்கீதாவால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.. கடும் ஆத்திரம் அடைந்தார்.. உடனே அந்த வீடியோ ஆதாரத்தை அழிக்க நினைத்தார்.. எனவே, வீடியோ எடுத்து கொண்டிருந்த அனம் கானின் மீது பாய்ந்து, அந்த கேமராவை பறிக்க முயன்றார்.. ஆனால், கேமராவை கொடுக்காமல், இறுக்கமாக பிடித்துகொண்டார் அனம்கான்.

இதனால் இன்னும் ஆவேசம் அடைந்த சங்கீதா, அனம் கானின் கையில், கண்டபடி கடித்தார்.. அப்போதும் கேமராவை அனம் கான் விடவேயில்லை.. ஒருகட்டத்தில் அனம்கானின் உடம்பெல்லாம் கடித்து குதறினார் சங்கீதா.. ஆனால் அனம்கான், உடம்பெல்லாம் கடிபட்ட காயத்துடன், வலியால் துடித்துக்கொண்டே, கேமராவை தூக்கிக்கொண்டு, போலீசுக்கும், கல்வித்துறை உயரதிகாரிகளிடம் ஓடினார்.. வீடியோ ஆதாரத்தையும் தந்து, சங்கீதா மீது புகாரையும் தந்தார்.

சங்கீதா: இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. கல்வித்துறை அதிகாரிகள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், நேராக கிளம்பி ஸ்கூலுக்கும் வந்துவிட்டனர். இப்போது தலைமை ஆசிரியை சங்கீதாவிடம் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்..

தலைமை ஆசிரியை சங்கீதா ஃபேஷியல் செய்து கொண்டது முதல், அனம்கானை பாய்ந்து பாய்ந்து கடித்த இந்த வீடியோ, சோஷியல் மீடியாவிலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறதாம்... ஒன்னும் சொல்றதுக்கில்லை.. ???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+