மொத்த லக்னோவும் நடுங்க.. தோனியையே யோசிக்க வைத்த பதோனி.. யாருங்க இந்த குட்டி பையன்.. ஷாக் பின்னணி
லக்னோ: சிஎஸ்கே அணிக்கு எதிராக லக்னோ டீமின் மொத்த டாப் ஆர்டரும் ஒடுங்கிய நிலையிலும் கூட மிடில் ஆர்டரில் இறங்கிய பதோனி லக்னோவை சரிவில் இருந்து மீட்டார்.
லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் ஆகாஷ் சிங் நீக்கப்பட்டு உள்ளார். சாகர் காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளார்.
இதனால் அணியில் சாகர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(வ/சி), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று உள்ளனர்.

இன்று சிஎஸ்கே அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்தே வரிசையாக லக்னோ டாப் ஆர்டர் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். நான்காவது ஓவரிலேயே மொயின் அலி பந்தில் கைலி மையர்ஸ் அவுட் ஆனார்.
அப்போதே பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பது தெரிந்தது. அதன்பின் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தீக்சனா வீச 5.4 ஓவரில் வோஹ்ரா, 5.5ல் குர்ணால் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா ஓவரில் ஸ்டோனிஸ் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மேட்ச் ட்விஸ்ட் ஆகி ஆட்டம் சிஎஸ்கே வசம் வந்தது.
மிடில் ஓவர்களில் பூரானும் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இப்படி சிஎஸ்கே அணிக்கு எதிராக லக்னோ டீமின் மொத்த டாப் ஆர்டரும் ஒடுங்கிய நிலையிலும் கூட மிடில் ஆர்டரில் இறங்கிய பதோனி லக்னோவை சரிவில் இருந்து மீட்டார்.
பதிரான, தீக்க்ஷனா என்று வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் அடித்து துவைத்தார். இடையில் 9 ஓவர்கள் பவுண்டரி போகாமல் இருந்த குறையை பதோனி சிக்ஸர்கள் மூலம் தீர்த்து வைத்தார். அதிலும் கடைசி ஓவர்களில் பதோனி அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். ஷார்ட் பந்துகளை மிக சிறப்பாக ஆடினார்.

இதுவரை 59 ரன்களை 33 பந்தில் 2 பவுண்டரி 4 சிக்ஸ் என்று 178.79 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி உள்ளார்.
அவருக்கு தற்போது 23 வயதுதான் ஆகிறது. இவர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்றாலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இவர் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். கடந்த சீசனிலேயே இவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார்.
ஆப் ஸ்பின் பவுலிங் சிறப்பாக செய்ய கூடியவர். லோவர் ஆர்டரில் பேட்டிங் செய்ய கூடியவர் இன்றைய போட்டியில் தன்னை சிறப்பான ஆல் ரவுண்டர் என்று நிரூபித்து உள்ளார்.
இவரின் சொந்த ஊர் உத்தரகாண்ட் ஆகும். சையது முஷ்டாக் கோப்பாய் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடினார். 41 பந்துகள் பிடித்த அவர் இன்று 54 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம்.
கவுதம் கம்பீர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இவர் டெல்லி உள்ளூர் அணியில் இருந்து அப்படியே லக்னோ அணிக்கு வந்தார். முன்னதாக இலங்கைக்கு சமீபத்தில் நடந்த அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினார்.
இதில் முதல் இன்னிங்சில் 202 பந்தில் 185 ரன்கள் எடுத்தார். 7வது இடத்தில் பேட்டிங் இறங்கி அவர் இவ்வளவு ரன்களை அடித்தார். இதன் மூலம் இந்தியா அந்த போட்டியில் 589 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசம் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அண்டர் 19 இந்திய அணி வென்றது.
அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் எடுத்து பதோனி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் சிறப்பாக ஆடியவர் தற்போது டி 20 போட்டியிலும் கலக்கி உள்ளார். தோனி என்று பெயர் வைத்தாலே இப்படித்தான் போல என்று பலரும் இவரை பாராட்ட தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications