ரிங்கு சிங்கிற்கு நிச்சயதார்த்தம்.. சமாஜ்வாதி பெண் எம்பியை மணக்கிறார்.. யார் இந்த பிரியா சரோஜ்?
லக்னோ: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி கட்சியின் எம்பியான பிரியா சரோஜ் ஆகியோருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரியா சரோஜ் எம்பி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங். இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் கேகேஆர் எனும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

27 வயது நிரம்பிய ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி ரிங்கு சிங்கிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் லக்னோவில் நடந்தது.
ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்பி பிரியா சரோஜை கரம் பிடிக்க உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. ரிங்கு சிங், பிரியா சரோஜ் எம்பிக்கு மோதிரம் அணிவித்தார். இந்த நிச்சயதார்த்தத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் மொத்தம் 300 பேர் பங்கேற்றனர். அரசியல் தலைவர்கள் என்று எடுத்து கொண்டால் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் , காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் சுக்லா, மூத்த அரசியல்வாதிய ராம் கோபால் யாதவ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் குமார், பியூஸ் சாவ்லா, உத்தர பிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டன் ஆர்யன் ஜுயல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். விழாவில் அறுசுவையுடன் சைவ உணவு பரிமாறப்பட்டது.
நிச்சயதார்த்த விழாவையொட்டி பாதுகாப்பு பலமாக இருந்தது. பார் கோடு முறையில் தான் உள்ளே விருந்தினர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருமண நிச்சயத்தார்த்தம் செய்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இப்போது பலரும் பிரியா சரோஜ் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி தேடி வருகின்றனர்.
அதாவது பிரியா சரோஜ் என்பவர் உத்தரபிரதேசத்தின் இளம் வயது எம்பியாவார். இவருக்கு வயது 25 தான் ஆகிறது. இருவருக்கும் 2 வயது வித்தியாசம். பிரியா சரோஜை விட ரிங்கு சிங் 2 வயது மூத்தவர். தற்போது பிரியா சரோஜ் உத்தர பிரதேசத்தின் மச்சிலிஷஹர் (Machhlishahr) தொகுதியின் எம்பியாக இருக்கிறார். பிரியா சரோஜின் தந்தை பெயர் துஃபானி சரோஜ். இவர் உத்தர பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.
பிரியா சரோஜ் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மச்சிலிஷஹர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் பபி சரோஜை 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்பியானார். தந்தை அரசியல்வாதி என்பதால் அவரது வழிக்காட்டுதலின்படி பிரியா சரோஜ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். இவர் நொய்டாவில் .ள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருந்தார்.
ரிங்கு சிங்குவிற்கும், பிரியா சரோஜிக்கும் இடையே நட்பு இருந்தது. இந்த நட்பு சில ஆண்டுகளுக்கு பிறகு காதலாக மலர்ந்தது. இப்போது இருவரும் நிச்சயத்தார்த்தம் செய்துள்ளனர். இவர்களின் திருமணம் நவம்பர் 18 ம் தேதி நடைபெற உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications