"ஆம்பள".. முஸ்லிம் பிரதமரானால்.. இந்துக்கள் கொல்லப்படுவார்களாம்.. அதிர வைத்த "காவி"யின் சாமியார்

முஸ்லிம் பிரதமர் ஆனால் இந்துக்களுக்கு ஆபத்து என்று பாஜக சாமியார் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அப்பதான் ஜாமீனில் வெளியேவந்தார் உபி சாமியார்.. மறுபடியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் பெயர் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி...!

 யார் இந்த சாமியார்?

யார் இந்த சாமியார்?

உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் வசிக்கிறார்.. 58 வயதாகிறது... தாஸ்னா தேவி என்ற ஃபேமஸ் கோயில் செயல்பட்டு வருகிறது.. அதை இவர்தான் நிர்வகித்து வருகிறார்..

ரஷ்யாவில் என்ஜினியரிங் படித்தவர்.. பிரிட்டனில் வேலைபார்த்து வந்துள்ளார்.. அதற்கு பிறகு முழு நேர சாமியாராகி விட்டார்.. 2007 முதல் இந்த கோயிலின் தலைமை பொறுப்பில் உள்ளார்.. பாஜக புள்ளிகள், தலைவர்கள், விஐபிக்கள் அத்தனை பேரும் இவருக்கு நெருக்கம்..

 வெறுப்பரசியல்

வெறுப்பரசியல்


இவர் வாயை திறந்தாலே ஆபத்துக்கள் கொப்பளிக்கும்.. இப்படித்தான் ஒருமுறை, முஸ்லீம்களை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார்.. இவர் இப்படி பேசவும், மற்ற இந்து மத தலைவர்களையும் இதையே பேச ஆரம்பித்தனர்.. கடைசியில் உபி தேர்தலில் மதம் தலைதூக்க இந்த பேச்சுதான் அடிப்படை காரணமாக இருந்தது.

 முஸ்லிம்கள்

முஸ்லிம்கள்

இவரது முழு முதற் குறிக்கோள் முஸ்லிம்கள்தான்.. அவர்கள் தீய சக்தி என்பதையே செல்லுமிடமெல்லாம் சொல்லி வருவார்.. முஸ்லிம்களை மொத்தமாக அழித்து விட்டு, இஸ்லாம் இல்லாத இந்தியா என்பதே இவரது ஸ்லோகமாக உள்ளது.. இந்த சாமியார் எது பேசினாலும், அது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.. ஒருகட்டத்தில் இவர்மீது போலீசில் தரப்பட்டது.. யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.. இதே உபியில் மட்டும் இவர்மீது 20 கேஸ்கள் உள்ளன.. அதனால், பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதி பலரும் புகார் சொல்லும்வரை விவகாரம் முற்றியது..

 புகார் - கைது

புகார் - கைது

இந்த வழக்குகள் குறித்து ஒருமுறை சாமியாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், மைக்கை பிடுங்கி தூர எறிந்துவிட்டார்.. கடந்த ஜனவரியில் ஒரு புகாரின்பேரில் இவர் கைதானார்.. ஆனால், பிப்ரவரி மாதமே வெளியே வந்துவிட்டார்.. வெளியே வந்தும்கூட, மறுபடியும் அதேபோல வெறுப்பரசியலைதான் பரப்பி வருகிறார்.. இப்போது இன்னொரு சர்ச்சை பேச்சை நேற்று பேசியிருக்கிறார்.. இதுவும் முஸ்லிம்களுக்கு எதிராகத்தான்..!

முஸ்லிம்கள்

முஸ்லிம்கள்

டெல்லியில் ஹந்து மகாபஞ்சாயத் என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. 500 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நரசிங்கானந்த் பேசியது இதுதான்: "ஒரு முஸ்லீம் பிரதமரானால் 20 வருடத்தில் 50 சதவீத இந்துக்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்படுவார்கள்... 40 சதவீத இந்துக்கள் கொல்லப்படுவார்கள்... இதுதான் இந்துக்களின் எதிர்காலம்... நீங்கள் இதை மாற்ற விரும்பினால், நீங்கள் ஒரு மனிதனாக இருங்கள். ஒரு மனிதனாக இருப்பது என்ன? இதை மாற்ற வேண்டுமென்றால் ஆம்பளை சிங்கமாக ஆயுதம் ஏந்துங்கள்..

 அதிக பிள்ளைகள்

அதிக பிள்ளைகள்

இந்துக்கள் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. அவங்களுக்கு சண்டையிட கற்றுத்தர வேண்டும்.. தி காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தை பார்த்தீங்களா? அதில் இந்துக்கள் எல்லாம் அவர்களது சொந்த மண்ணை விட்டு, ஏன், பிள்ளைகளைகூட விட்டுவிட்டு சென்று விட்டார்கள்... நீங்களும் அப்படி சண்டை போடாமல் வெளியேறினால் இந்தியப் பெருங்கடலில்தான் மூழ்கி சாக வேண்டும்... அதுதான் உங்களுக்குரிய ஒரே வாய்ப்பு.." என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

 ஹைலைட்

ஹைலைட்

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், டெல்லியில் நடந்த இந்த கூட்டத்திற்கு போலீஸ் அனுமதியே தரவில்லையாம்.. கூட்டம் நடக்கும்போதுகூட, அதை தடுத்து நிறுத்தவில்லை.. இப்படியெல்லாம் விஷத்தை கக்கி பிறகும்கூட சாமியாரை கைது செய்யவில்லை.. ,இதற்கு நடுவில் செய்தி சேகரிக்கச் சென்ற சில மீடியாக்கார்களை தாக்கி உள்ளனர்.. பாதிக்கப்பட்டவர்கள் முகர்ஜி நகர் போலீசில் புகார் தந்துள்ளனர்.. எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது... பிறகு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அதையும் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+