உ.பி. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? அதிகாலை முதல் நடந்தது என்ன?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியானதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரையிலான 45 நாட்களுக்கு நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்த மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 4.8 கோடி மக்கள் புனித நீராடினர். இது கடந்த பொங்கல் அன்று 3.5 கோடி பேர் நீராடியதை விட அதிகமாகும்.
இந்த நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் தை அமாவாசை நாளன்று திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கானோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் தை அமாவாசை தினத்தன்று, 10 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு, கூட்டத்தை கையாளும் வகையிலான வசதிகள் அந்த பகுதியில் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலை முதலே புனித நீராட ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் கீழே தவறி விழுந்தனர். இதனால் 10 க்கும் மேற்பட்டோர் பலியானதாக சொல்லப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த கூட்ட நெரிசலால் மேலும் மேலும் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எப்படியோ முட்டி மோதி கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வந்தவர்கள் குளிக்க முடியாமல் திரும்பி விட்டனர். மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீராடியவர்கள் வெளியே வந்து மற்றவர்களுக்கு வழி விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கினர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த கும்பமேளாவில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications