சிறுத்தையுடன் சண்டையிட்டு வென்ற "சிங்கப்பெண்".. மகனை இழுத்துச் சென்றதும் வந்ததே தைரியம்.. ப்பா!
மகனை மீண்டும் நெருங்க விடாத சாந்தரேஷ் தேவி, உடல் முழுவதும் ரத்தம் வழிய வழிய சிறுத்தை புலியுடன் மீண்டும் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்ற சிறுத்தை புலியிடம் (Leopard) தீரமாக சண்டையிட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
"தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லை" என கேஜிஎப் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இதனை நிரூபிக்கும் விதமாக உலகில் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
தனது குஞ்சுகளை காப்பாற்ற பாம்பையே கொல்லும் எலி, தனது குஞ்சை தூக்கிச்சென்ற கழுகுடன் சண்டையிட்டு மீட்கும் கோழி என எத்தனையோ வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வகையில், தனது பிள்ளைக்கு ஆபத்து என்றால் எந்த எல்லைக்கும் செல்ல ஒரு தாய் தயங்க மாட்டாள் என்பதற்கு சான்றாக உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த மகன்
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ளது ஜீத்பூர் கிராமம். இந்தப் பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த கிராமத்தைச் சேர்ந்த சாந்தரேஷ் தேவி (34) என்ற பெண் அங்குள்ள கருப்புத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தோட்டத்துக்கு சற்று தொலைவில் அவரது 10 வயது மகன் திகேந்திர சைனி பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

மகனை இழுத்துச் சென்ற சிறுத்தை
அப்போது அங்குள்ள புதரில் மறைந்திருந்த ஒரு பெரிய சிறுத்தை புலி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து திகேந்திர சைனியை கடித்து இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தரேஷ் தேவி, உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த சிறுத்தை புலியை விடாமல் துரத்திச் சென்றார். ஒருகட்டத்தில் சிறுவனை கீழே போட்ட சிறுத்தை புலி, சாந்தரேஷ் தேவி மீது பாய்ந்தது. கரும்பை வெட்டும் அரிவாளுடன் இருந்த சாந்தரேஷ் தேவியும் சிறுத்தையுடன் கடுமையாக சண்டையிட்டார்.

சிறுத்தை புலிக்கு விழுந்த வெட்டு
சிறுத்தை புலியும் அவரை பயங்கரமாக தாக்கியது. அப்போது கையில் இருந்த அரிவாளை எடுத்து சிறுத்தை புலியின் முகத்தில் வெட்டினார் சாந்தரேஷ் தேவி. இதனால் சிறுத்தை புலி மேலும் மூர்க்கமாகி, சாந்தரேஷ் தேவியை பல இடங்களில் கடித்து குதறியது. பின்னர், சிறுவனை மீண்டும் கவ்வி செல்ல முயற்சித்தது. ஆனால், மகனை மீண்டும் நெருங்க விடாத சாந்தரேஷ் தேவி, உடல் முழுவதும் ரத்தம் வழிய வழிய சிறுத்தை புலியுடன் மீண்டும் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்.

மருத்துவமனையில் சேர்ப்பு
இந்நிலையில், சிறுத்தை புலியின் சத்தத்தை கேட்டு கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த சிறுத்தை புலி அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியது. இதனைத் தொடர்ந்து, சிறுத்தையு புலிடன் சண்டையிட்டு குத்துயிரும் கொலை உயிருமாக இருந்த சாந்தரேஷ் தேவியையும், சிறுவன் திகேந்திர சைனியையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

குவியும் பாராட்டு
சிறுத்தை புலி தாக்கியதில் சாந்தரேஷ் தேவிக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது இதயமும் சிறுத்தை புலியின் நகத்தால் சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, சிறுத்தை புலி கடித்ததில் அவரது மகனின் தலைப் பகுதியில் அதன் பற்கள் ஆழமாக பதிந்துள்ளன. எனினும், காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு வந்ததால் இருவரையும் காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஒரு மாதக்காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தனது மகனை காப்பாற்ற குரூரமான சிறுத்தை புலியிடமே போராடி வெற்றி பெற்ற சாந்தரேஷ் தேவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications