சாமானிய மக்களிடம் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்பதே இலக்கு! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: சாமானிய மக்களின் கைகளில் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்பதில் பாஜக உறுதியோடு இருக்கிறது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகியின் 6 ஆண்டு ஆட்சியை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம், இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் நீடிக்கவில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனை படைத்திருக்கிறார். என இந்த 6 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் அறிவித்த திட்டங்கள் குறித்து பாஜக அரசு மக்கள் மத்தியில் சாதனை விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் "மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாஜகவின் நோக்கம். எதிர்கட்சிகளை போல பாஜக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்களுடன் அப்போதைய அரசாங்கம், அதாவது தற்போதைய எதிர்க்கட்சிகள் சமர பாதையை பின்பற்றின. இதே போக்கு மக்களின் நலனிலும் ஏற்பட்டது. தற்போதைய எதிர்க்கட்சியினர் மக்கள் நலனில் கூட சமரசம் செய்துகொண்டனர்.
ஆனால் பாஜக எதிர் திசையில் இயங்கியது. நாங்கள் ஒருபோதும் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இதனால்தான் மக்கள் இரண்டாவது முறையாக எங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நாங்கள் இந்த மாநிலத்திற்காக ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உத்தரப் பிரதேசம் சீரான வளர்ச்சியை கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் துப்பாக்கிகளுடன் திரிந்த இம்மாநில இளைஞர்கள் தற்போது டேப்லெட்களுன் கல்வியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றனர். இன்று உத்தரப் பிரதேசத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications