பாஜக அரசின் நலத்திட்டங்களே ராமராஜ்ஜியத்தின் அடித்தளம்! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பாரதிய ஜனதா அரசின் நலத்திட்டங்களே ராமராஜ்ஜியத்தின் அடித்தளம் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், "நலத்திட்டங்களே ராமராஜ்ஜியத்தின் அடித்தளம்" என்று கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பொய்யையும், அநீதியையும் தோற்கடித்து ராமராஜ்ஜியத்தை உருவாக்கினார். அதே ராமரின் லட்சியங்களை பின்பற்றி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் லட்சக்கணக்கான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை இந்த மாநில அரசு உறுதி செய்திருக்கிறது. சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயல்கிறார்கள். அவர்கள் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மூலம் சமூக மற்றும் தேசிய ஒற்றுமையை குலைக்கவும் செய்கிறார்கள்.
500 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பிரமாண்டமான ராமர் கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறார். அந்த வகையில் இந்த தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். ராமர் கோயிலை கட்டுவதற்கு ஏராளமானோர் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். இனி உத்தரப் பிரதேசம் ராமர் ஆட்சியின் கீழ் மேலும் செழிப்பாக வளரும்" என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications