ஒரு கோடி வேலை வாய்ப்பு.. அசத்தி காட்டிய உத்தரப் பிரதேசம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நேற்று முதலமைச்சர் இல்லத்தில் கொடியை ஏற்றிய பின்னர் பேசிய அவர், "உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களும் இன்று இந்த வடிவத்தில் செழித்து வருகின்றன. இன்று நாம் அனைவரும் புதிய இந்தியாவைப் பார்க்கிறோம். பூமியை ஒரு துண்டு நிலமாக நாங்கள் ஒருபோதும் கருதவில்லை. அதை பூமி தாயாக பார்க்கிறோம். பல்லாயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியத்தில் நாம் பெருமை கொள்கிறோம். வெவ்வேறு உடை, உணவுப் பழக்கம் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான்.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் வடக்கு எல்லையை பாதுகாக்கும் பணியில் உயிரிழக்கிறார். இந்த தியாகம்தான் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இன்னும் உறுதியாக கூறுகிறது. எனவே இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. கடந்த 6 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. இன்று ஜி20யில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பது இந்தியர்களாகிய நமக்குப் பெருமை. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில், இங்கு வலுவான சட்டம் ஒழுங்கு உள்ளது .
உ.பி.யில் ரூ.36 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வாதாரமும் கிடைக்கும். நம்முடைய மாநிலத்தில் சுற்றுலாவுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மக்களை ஈர்த்திருக்கிறது. இன்று நாம் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக திகழ்கிறோம். நமது அரசு அயோத்தி மற்றும் ஜீவாரில் விமான நிலையங்களை கட்டி வருகிறது. குடிநீர் இணைப்புக்கான பணியும் நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications