வளர்ச்சியும், திட்டங்களும் அனைவருக்குமானதுதான்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அரசு அனைவரையும் ஒரே மாதிரியாகதான் பார்க்கிறது என்றும் அனைவருக்கும் ஏற்ற, சரிசமமான திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் பேசுகையில், "உத்தரப் பிரதேச அரசுக்கு அனைத்து மக்களும் சமம்தான். யாருக்கும் இங்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இப்படிதான் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.6.90 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களும் இதன் அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்குமான வளர்ச்சி இருந்தால்தான் மாநிலத்தின் வளர்ச்சி சாத்தியமாகும்" என்று யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேச அரசு சமீபத்திய பட்ஜெட்டில் கலாச்சாரம் பாதுகாப்பு, ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாடு போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். ஒட்டுமொத்த சுகாதாரத்திற்கு ரூ.12,650 கோடியும், புதியதாக அமைய உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.2491 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சாலை வசதிகளை மேம்படுத்தவும் பரவலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 60,397 கி.மீ சாலைகள் பள்ளங்களற்ற சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. 14,144 கி.மீ சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே 2022-2023 நிதியாண்டில் மொத்தம் 60,397 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் பள்ளமற்றதாக மாற்றப்படும். அதேபோல சர்வதேச அளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம்தான் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
எனவே பால் சங்கங்களை வலுப்படுத்தி, புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு ரூ.86.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 'நந்த் பாபா' பால் திட்டத்தை செயல்படுத்த ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொடங்கி வேளாண் வரை அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டுதான் பாஜக அரசு செயலாற்றி வருகிறது" என இப்படியாக பல்வேறு திட்டங்களுக்கு சிறப்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications