டபுள் என்ஜின் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுகிறது! உ.பி முதல்வர் பெருமிதம்
லக்னோ: டபுள் என்ஜின் அரசாங்கத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் ரூ.414 கோடி மதிப்பிலான 217 வளர்ச்சி திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டிய யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், "மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் வெளிப்படைத்தன்மையாக செயல்படுத்தி வருகிறது. சொந்தமாக வீடு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சோன்பத்ரா மாவட்டம் உத்தரப் பிரதேசத்தின் ஆற்றல் மையமாக கருதப்படுகிறது. ஆனால் இம்மக்களுக்கு கடந்த காலங்களில் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இது சமாஜ்வாடி ஆட்சியின் அப்பட்டமான தோல்வி. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இம்மாவட்டத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் போதிய மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறோம். மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், "ஹர் கர் நல் யோஜனா" திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.
அதேபோல பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் முதலமைச்சர் ஆவாஸ் யோஜனா மூலம் இதுவரை சோன்பத்ரா மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக மாவட்டத்தை மேம்படுத்த சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விமான நிலையத்தையும் மேம்படுத்த முயன்று வருகிறோம். இம்மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது.
இந்த மருத்துவமனை கல்லூரி திறக்கப்படும்போது, மாவட்டத்திற்கு ஓர் மருத்துவமனை என்கிற கனவு நிஜமாகும். உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் ராமராஜ்ஜியத்திற்கான அடித்தளம்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications