முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக உத்தரப் பிரதேசம் வளர்ந்திருக்கிறது! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசம் கடந்த 6 ஆண்டுகளில் முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக மாறியிருக்கிறது. இதன் மூலம் ஏராளமான முதலீடுகள் குவிந்துள்ளன என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. ஆனால் இந்த 6 ஆண்டுகளில் இந்த மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சுற்றுலாத்துறை, தொழில்துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் விளைவாக, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது.

Yogi Adityanath is proud that Uttar Pradesh has grown as an investment-friendly state in the last 6 years

நாட்டிலேயே மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலமாகும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வளர்ச்சியடையாத மாநிலமாக கருதப்பட்டது. யாரும் உ.பி.க்கு வர விரும்பவில்லை. உ.பி.யின் பெயரைக் கேட்டாலே மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது, ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. சமீபத்திய ரிசர்வ் வங்கி மற்றும் NITI ஆயோக் அறிக்கைகள், உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் மாற்றத்தை கணிசமாக எடுத்துக்காட்டுகின்றன.

உ.பி.யில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கேட்பவர்களின் கண்களை திறந்து இந்த அறிக்கையை படிக்க வேண்டும். நாட்டிலேயே பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் முதல் மாநிலம் உ.பி. தான் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உத்தரபிரதேசம் ஒரு பெரிய முதலீட்டு மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது, தொழில்முனைவோருக்கான வங்கிச் சேவைகளில் சிறந்து விளங்குகிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

உ.பி.யில் உள்ள வட இந்தியாவின் முதல் டேட்டா சென்டர் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக உள்ளது, அதே சமயம் உ.பி.யின் ஃபிலிம் சிட்டி மாநிலத்தின் மற்றொரு அடையாளமாக உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் உ.பியின் தொழில் முனைவோர் மாநாட்டை டெல்லியிலும், மும்பையிலும் நடத்தினர். ஏனெனில் உ.பி அப்போது வளர்ச்சியடையாத மாநிலமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாங்கள் இந்த மாநாட்டை லக்னோவில் நடத்தி அசத்தினோம்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+