பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த அதிரடி திட்டம்! உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில், தொழில்முனைவோரின் நண்பர்களுக்கான 14 நாள் அடிப்படை நோக்குநிலை திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடங்கியுள்ளது.
தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஒரேயொரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதேபோல பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. வழக்கமாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதன் முதலாக லக்னோவில் நடத்தி காட்டியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழில்முனைவோரின் நண்பர்களுக்கான 14 நாள் அடிப்படை நோக்குநிலை திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 26 பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும். முதலீட்டு சார்ந்த கொள்கைகள், விதிகள், எளிதாக வணிகம் செய்வது மற்றும் பல்வேறு இணையதளங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கான வருகைகள் ஆகியவை குறித்து விரிவாக விவரிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் முதலமைச்சரின் உத்யமி மித்ரா யோஜனாவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவார்கள்.
இவர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் வர இருக்கும் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், மருந்து பூங்காக்கள், பிரத்யேக சரக்கு நடைபாதை போன்றவை குறித்து விரிவாக விளக்கப்படும்" என்று கூறியுள்ளார். இவர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications