பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்! உத்தரப் பிரதேசத்தை வேற லெவலுக்கு உயர்த்தும் யோகி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக மாற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏராளமான தாக்குதல்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக பாலியல் பலாத்கார குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் அடிக்கடி நடந்து வருவதாகவும், பாஜக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.

Yogi Adityanath ordered to upgrade Uttar Pradesh as a safe state for women and children

இந்த குற்றச்சாட்டு பாஜகவுக்கு ஒரு கரும்புள்ளியாக இருக்கிறது. இதுவரை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யாரும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீடித்தது இல்லை. ஆனால், யோகி ஆதித்யநாத் இந்த சாதனையை முறியடித்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகளை கடந்திருக்கிறார். இந்த சாதனையை கட்சி கொண்டாடி வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் இப்படியான குற்றச்சாட்டை வைத்திருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை போக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தின்படி 12 துறைகள் இந்த திட்டத்தை செயல்படுத்தும். தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 3 மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பான நகர திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும், இதில் முதல் கட்டத்தில் 17 மாநகராட்சிகளுடன் கௌதம் புத்த நகர், இரண்டாம் கட்டத்தில் 57 மாவட்ட தலைமையக நகராட்சிகள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 143 நகராட்சிகள் அடங்கும். இந்த திட்டத்தின்படி போலீசின் ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும், அதேபோல நீதிமன்றங்கள், சிறைகள், மதுக்கடைகள், பெண்கள் கல்லூரிகள், பூங்காக்களில் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டால் இந்தியாவில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்கிற பெயரை உத்தரப் பிரதேசம் எடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+