ஏர்போர்ட்.. மெட்ரோ.. வேலைவாய்ப்புகள் என புதிய அவதாரம் எடுக்கும் உ.பி அரசு! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: சமாஜ்வாடி ஆட்சி காலத்தில் கான்பூர் நகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டது என்ற யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கான்பூரில் நேற்ற நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், மேலும் பேசியதாவது, "ஒரு 6 ஆண்டுகளுக்கு முன்னர் யோசித்து பாருங்கள் இந்த மாநிலம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். மறுபுறம் மாநிலத்தின் வருவாய் கடுமையாக சரிந்து இருந்து. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் சொத்து மதிப்பு மட்டும் தொடர்ந்து உயர்ந்துக்கொண்டிருந்தது.

படித்து முடித்த மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை இல்லாத காரணத்தினால் இவர்கள் வேறு திசைகளில் திருப்பப்பட்டனர். குற்ற சம்பங்கள் அதிகரித்தன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவை துப்பாக்கி முனையில் நடைபெற்றது. இவையனைத்திற்கும் கான்பூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள்தான் காரணமாக இருந்தன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிலைமை தலைகீழாக மாற்றம் பெற்றது. இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏனெனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் ஏராளமான தொழிற்சாலைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்காக உள்கட்டமமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுள்ளன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10 முக்கிய அம்சங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முக்கியமானது உட்கட்டமைப்பு.
கான்பூரில் தற்போது விமான நிலையம் அமைந்திருக்கிறது. இது இந்த மாதம் திறக்கப்படும். அதேபோல சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்த லக்னோ-கான்பூர் இடையே கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை ஆகியவை இந்த உட்கட்டமைப்பு வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இது தவிர கான்பூர் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் நிலை மாறும். ஒரு கட்டத்தில் வன்முறைக்கும், கலவரங்களுக்கும் பெயர் பெற்ற இந்த மாநிலம் தற்போது சிறப்பான சட்டம் ஒழுங்குக்கு பெயர் பெற்றிருக்கிறது.
எனவே வாக்காளர்களாகிய நீங்கள் இந்த முறையும் பாஜகவுக்கு வாக்களித்து டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications