“புதிய திட்டங்கள் மூலம் பெண்களின் கல்வியும், பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது!” யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சாமானிய பெண்களுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பை வழங்கும் முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேச பெண்கள் அதிக அளவில் பலனடைந்துள்ளார் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

Yogi Adityanath said that women have benefited a lot through Chief Ministers Kanya Sumangala Yojana.

அப்படி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டம். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதையும், அதன் மூலம் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள்தான் அதிக அளவில் பயன் பெற்றிருக்கின்றனர்.

2022-23 நிதியாண்டில் மட்டும், பிரயாக்ராஜில் மொத்தம் 59,635 பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர், இது அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளது இதேபோல், 2019-20 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில், 54,809 சிறுமிகள் பிரயாக்ராஜ் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வரிசையில் உன்னாவ் இரண்டாவது இடத்தையும், வாரணாசி மூன்றாவது இடத்தையும், ஹர்டோய் மற்றும் ஃபதேபூர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.

பெண் சிசுக்கொலை, சமச்சீரற்ற பாலின விகிதம், குழந்தைத் திருமணம் மற்றும் குடும்பங்களுக்குள்ளேயே பெண்கள் மீதான எதிர்மறையான அணுகுமுறை போன்ற சமூகப் பிரச்சினைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க அரசு திட்டமிட்டு இந்த முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+