காலை மடக்கி! யோகா கூட செய்ய தெரியல.. பெயர் மட்டும் யோகி ஆதித்யநாத்! காங்கிரஸ் கலாய் - வீடியோ லீக்
லக்னோ: இணையத்தில் நேற்று வெளியான யோகி ஆதித்யநாத்தின் யோகா வீடியோ உத்தரப்பிரதேச அரசியலில் புதிய விவாதப் பொருளை கிளப்பி இருக்கிறது.
கடந்த ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளில் யோகாசனம் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களே திரளாக யோகாசனம் செய்து ஊடகங்களில் அந்த காட்சிகளை வெளியிடுவது வழக்கம்.

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இந்தியாவில் ஆட்சி அமைத்த பிறகு யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் இந்திய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நாளில் அனைவருடனும் சேர்ந்த யோகா செய்வது வழக்கம். அதேபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் மக்களுடன் சேர்ந்து திரளாக யோகாசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான யோகா யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அமெரிக்காவில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகா செய்தார்.
அதேபோல் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் என பலர் யோகா செய்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோகா செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தின் கோரக்பூரில் நடைபெற்ற யோகா நிகழ்வில் கலந்துகொண்ட அவர் நூற்றுக்கணக்கானோருடன் சேர்ந்து யோகா செய்தார்.
அந்த நாளில் அவர் யோகா செய்யும் வீடியோவுடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான், புதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதற்கு யோகா தினத்தன்று எதிலும் வெளியாகவில்லை. தற்போது வெளியான வீடியோவில் யோகி ஆதித்யநாத் மிகவும் சிரமப்பட்டு யோகா செய்ய முயல்கிறார்.
சில ஆசனங்களுக்கு பிறகு, நின்றுகொண்டு வலது காலை மடக்கி இடதுகால் மூட்டில் வைத்து கை இரண்டையும் விரித்து காட்டும் ஆசனத்தை அனைவரும் சுலபமாக செய்ய யோகி ஆதித்யநாத் மட்டும் தட்டுத்தடுமாறி செய்கிறார். இந்த வீடியோவைதான் நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றார்கள்.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. "பெயரில் யோகி என்று வைத்துக் கொண்டு யோகாசனம் எப்படி செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பாசாங்கு செய்கிறீர்கள், பாபா! உங்கள் கட்டுப்பாட்டில் யோகாசனம் இல்லை." என்று விமர்சித்து உள்ளது.
ஒருபக்கம் பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்க, யோகி தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் விட்டு வைக்காமல் அம்மாநில காங்கிரஸ் ஐடி விங் தீவிரமாக செயலாற்றி வருவதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications