75 லட்சம் குடிநீர் இணைப்புகள்.. அதுவும் குறுகிய காலத்தில்.. டாப் 4 இடங்களுக்குள் வந்த உத்தர பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் பல லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குறுகிய காலத்தில் பல லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை அம்மாநில அரசு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியே கொண்டாடியுள்ளனர்.

இந்தியாவில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக குழாய் நீர் கனெக்ஷன் இன்னும் பல இடங்களில் இல்லை.

Yogis Uttar Pradesh is in Top States with More than 75 Lakh Tap Connections

மத்திய பாஜக அரசு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஜல் ஜீன் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல கோடி வீடுகளுக்குக் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த ஜன. 31 வரை மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 75 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்குக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு மாநிலங்கள் மட்டுமே 75 லட்சம் என்ற இந்த இலக்கை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச அரசின் இந்த மாபெரும் சாதனையைக் கொண்டாட அம்மாநில அரசு 'ஹர் கர் ஜல்' என்ற விழாவையும் நடத்தியது. இத்திட்டத்தை முன்னெடுத்த குழுவைப் பாராட்டி 75 பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது மட்டுமின்றி ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது. மேலும், இந்தத் துறையில் உத்தரப் பிரதேச அரசின் சாதனைகளைப் பட்டியலிடும் மின் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பண்டேல்கண்ட் உள்ளிட்ட உபி-இன் பல பகுதிகளில் இக்கட்டான சூழல்களிலும் சுத்தமான குடிநீர் எப்படி எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை விளக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாகக் கிழக்கு, மேற்கு உத்தரப் பிரதேச கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பை எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டன.

நாட்டிலேயே அதிக கிராமங்களைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது, குறுகிய காலத்தில் அதிகப்படியான வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பை வழங்கி உத்தரப் பிரதேச அரசு சாதனை படைத்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் ஹர் கர் ஜல் யோஜனா உத்திரப் பிரதேசம் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

75,26,740 கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் இணைப்பை வழங்கி நாட்டிலேயே நான்காவது இடத்தை உத்தரப் பிரதேசம் பிடித்துள்ளது. பீகார் (1.58 கோடி), மகாராஷ்டிரா (1.06 கோடி) குஜராத் (91 லட்சம்) டாப் இடங்களில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+