10 ரூபாய்க்கு 4 இட்லி.. மலிவு விலையில் நடமாடும் உணவகம்! தேர்தலுக்கு முன் ரூட்டை மாற்றிய டாக்டர்.சரவணன்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பரிசு, ஹாட் பாக்ஸ் என அரசியல் கட்சிகள் வாக்காளர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் டாக்டர்.சரவணன் நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி இருக்கிறார். பத்து ரூபாய்க்கு நான்கு இட்லி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உடன் இந்த நடமாடும் உணவகம் தெருத்தெருவாக மதுரை பகுதியில் சுற்றி வருகிறது.
தமிழ்நாடு மற்றொரு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெண்கலையில் 2021ல் மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றியது. இதுவரை திமுக அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் வென்றதில்லை.
அதேபோல அதிமுகவும் அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றதில்லை. இந்த சாதனையை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென இரு கட்சிகளுமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. வழக்கமாக தேர்தலுக்கு முன்னர் வரும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் வாக்காளர்களை மிகச் சிறப்பாக கவனிக்க வைக்கும்.

அதிமுக தேர்தல் வியூகம்
அந்த வகையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போதும் பொங்கல் பண்டிகையின் போதும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தீபாவளி -பொங்கல் பரிசுகளை வழங்கி வருகின்றனர். தற்போது கூட தமிழகம் முழுவதும் திமுக தரப்பில் அண்டா ஹாட் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என அதிமுகவினரும் தங்கள் பகுதிகளில் வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
டாக்டர் சரவணன்
அது மட்டும் இல்லாமல் கோவில் திருவிழாக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகைகளை ஒட்டி நன்கொடைகள், பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, திருவிழாக்களில் கலந்து கொள்வது, திருமண நிகழ்வுகளில் பங்கேற்பது என மிகவும் பிசியாக வலம் வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மத்திய மாவட்டமான மதுரையில் இருக்கும் அரசியல் புள்ளிகள் தீவிரமாக தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். அதிமுக தரப்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தாலும் தனக்கு செல்வாக்குள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் இந்த முறை போட்டியிட விருப்பமான தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் வேலை பார்த்ததால் நிச்சயம் அவருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாகவே அந்த பகுதியில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார் சரவணன். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தபோது பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்டவற்றை வழங்கி அழைப்பு விடுத்தார். மேலும் தீபாவளி பொங்கல் பண்டிகையின் போதும் சிறப்பான கவனிப்பு இருந்தது.
நடமாடும் மலிவு விலை உணவகம்
இதையெல்லாம் விட தற்போது அடுத்ததாக ஒரு புது ஐடியாவை யோசித்து இருக்கிறார் சரவணன். தற்போது சூர்யா டிரஸ்ட் - சரவணா மருத்துவமனை இணைந்து மலிவு விலை நடமாடும் உணவகத்தை நேற்று தொடங்கி வைத்திருக்கிறார் சரவணன். இதில் சினிமா நடிகர் கஞ்சா கருப்பு, சின்னத்திரை புகழ் மதுரை முத்து ஆகியோர் கலந்து கொண்டு அந்த வாகனத்தை தொடங்கி வைத்தனர். இந்த நடமாடும் உணவகம் அப்பகுதி முழுவதும் சுற்றிவர உள்ளது.
10 ரூபாய்க்கு 4 இட்லி
காலை மதியம் இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட இருக்கிறது. 10 ரூபாய்க்கு நான்கு இட்லி, தேநீர் மற்றும் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் தொண்டர்களுக்கு பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கி வேட்பாளர்கள் அசத்துவார்கள். சற்று வித்தியாசமாக தொகுதி மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நடமாடும் உணவகத்தை சரவணன் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு!











Click it and Unblock the Notifications