அந்த தாத்தா இங்கெல்லாம் தொட்டாரு.. 10 வயது குழந்தையை சீரழித்த முதியவரை ஓட ஓட அடித்த தெருமக்கள்
10 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை தந்துள்ளார்
Recommended Video
மதுரை: "அந்த தாத்தா எனக்கு சாக்லேட் வாங்கி தருவாரு... இங்கெல்லாம் தொடுவாரு.." என்று பிஞ்சு குழந்தை பேசுவதை கேட்டு அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்... விளைவு.. 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சில்மிஷம் செய்த முதியவரை பொதுமக்களே ரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்!
மதுரை கீழ வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 10 வயதாகிறது.. 5-ம் வகுப்பு படிக்கிறாள்.. இவளுக்கு தாய்-தகப்பன் கிடையாது.. அதனால், தன்னுடைய தாத்தா வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார்.. சுந்தரம் வயது 60... அம்மா, அப்பா இல்லாத குழந்தை என்பதாலும், வயதானவர் பாதுகாப்பில்தான் குழந்தை வளர்வதாலும் இந்த பெரியவருக்கு வசதியாக போயிற்று.

சில்மிஷங்கள்
அதனால், சிறுமியை அடிக்கடி கடைக்கு அழைத்து சென்று சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் வாங்கி தந்திருக்கிறார்.. கடைக்கு சென்றுவிட்டு, அப்படியே தன் வீட்டுக்கும் சிறுமியை அழைத்து வந்து பாலியல் தீண்டல் செய்துள்ளார்.. கேவலமான சில்மிஷங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

விடுதி
இந்த நிலையில், சிறுமியின் தாத்தாவால் தொடர்ந்து குழந்தையை கவனிக்க முடியவில்லை என்பதால், அரசு விடுதியில் சேர்க்க அழைத்து சென்றார்.. அப்போது, வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த ரிப்போர்ட்டில், சிறுமி பலமுறை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.

விசாரணை
இதனால் உறவினர்களும், பொதுமக்களும் கொதித்து போய்விட்டனர்.. தொடர்ந்து சிறுமியிடம் இதை பற்றி கேட்டபோதுதான், பக்கத்து வீட்டு தாத்தா இப்படி சாக்லெட் வாங்கி தந்து, அவரது வீட்டுக்கு அழைத்து சென்றது முதல் எல்லாவற்றையும் சொன்னாள்.

சரமாரி அடி
ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுதிரண்டு, தெருவில் வந்து கொண்டிருந்த அந்த பெரியவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.. ரோட்டிலேயே ஓட ஓட விரட்டி அடித்து... போலீசாரிடமும் ஒப்படைத்தனர்.. இது சம்பந்தமாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications