"உன்னை பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலயே.. நீயெல்லாம்.." அரசு பெண் டாக்டரை தாக்கிய 2 பெண்கள் கைது
மதுரை: "உன்னை பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலயே.. நீயெல்லாம் எங்களை செருப்பு போடக்கூடாதுன்னு சொல்றியா? நாங்க யார் தெரியுமா.." என்று டாக்டர் மாலதியை செருப்பால் அடித்து, மிரட்டியதாக கூறப்பட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. பிறகு பிரசவ அறைக்குள்ளும் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அப்போது அந்த பெண்ணுடன் சில உறவுக்கார பெண்களும் வந்துள்ளனர்.. அவர்களில் ஒருவர் பிரசவ வார்டுக்குள் செருப்புக் காலுடன் நுழைய முயன்றுள்ளார்.. அதற்கு பெண் டாக்டர் மாலதி, "செருப்பு காலுடன் வார்டுக்குள் வரக்கூடாது" என்று சொல்லியதாக தெரிகிறது.

தலைவர்
உடனே அந்த பெண், 'உன்னை எல்லாம் பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலயே.. நீயெல்லாம் எங்களை செருப்பு போடக்கூடாதுன்னு சொல்றியா? நாங்க யார் தெரியுமா.." என்று அரசியல் புள்ளி ஒருவரது பெயரை சொல்லி மிரட்டி உள்ளார். இந்த வாக்குவாதம் தகராறாக முற்றியுள்ளது.

மாலதி
ஒரு கட்டத்தில், அந்த பெண் உட்பட மேலும் சிலர் டாக்டர் மாலதியை தாக்கி உள்ளதாக சொல்கிறார்கள்.. இதனால், டாக்டர் மாலதி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.கிட்டத்தட்ட 5 மணி நேரம் ராஜாஜி ஆஸ்பத்திரி டாக்டர்கள் அனைவருமே சேர்ந்து நடத்திய இந்த போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை
டாக்டர்கள் தரப்பில் சொல்லும்போது, "செருப்பை கழட்டி டாக்டர் மாலதியை செருப்பால் அடித்துள்ளனர்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்" என்கின்றனர். ஆனால் எதிர்தரப்பில் சொல்லும்போது, "கர்ப்பிணி என்றும் பாராமல் கன்னத்தில் டாக்டர் மாலதி அறைந்துவிட்டார்.. அதை பார்த்து கொதித்துபோய்தான் நாங்கள் கேள்வி கேட்டோம்..

கைது
அதற்கு எங்களை அசிங்கமாக திட்டி, தாக்கினார்" என்கிறார்கள். இதில் யார் பக்கம் தவறு என்று தெரியவில்லை என்பதால் போலீசார் இரு தரப்பிலும் விசாரித்தனர்.. இறுதியாக பணியிலிருந்த மாலதியை தாக்கியதாக கர்ப்பிணியின் உறவினர்கள் ராஜேஸ்வரி, முருகேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications