தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்.. வழக்குப்பதிவு
மதுரை: மதுரையில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பலியானது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரையில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி ஆனார்கள். நேற்று இரவு நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

என்ன நடந்தது?
சிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற அடுத்தடுத்து லட்சுமணன், சரவணன் என்ற இரண்டு ஊழியர்கள் உள்ளே இறங்கி உள்ளனர். உள்ளே மயங்கி விழுந்த சிவக்குமாரை முதலில் சத்தமாக கத்தி எழுப்ப முயன்று உள்ளனர். பல முறை கத்தியும் சிவக்குமார் எழுந்திருக்கவில்லை.

தூக்க முடிவு
அவரிடம் கயிறை தூக்கி வீசி எப்படியாவது தூக்கலாம் என்று முயன்று உள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் சரியாக கண் தெரியவில்லை. லட்சுமணன், சரவணன் என்ற இரண்டு ஊழியர்கள் உள்ளே இறங்கி உள்ளனர். உள்ளே சென்று அவரை கயிறை கட்டி தூக்க முயன்று உள்ளனர். ஆனால் கயிரை கட்டிக்கொண்டு இருக்கும் போதே இரண்டு பேரும் அங்கேயே மயங்கி சிவக்குமார் மீது விழுந்துள்ளனர்.

பலி
உள்ளேயே விஷ வாயு தாக்கி அவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் மீது இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளர் விஜயானந்த், ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு
இரவு நேரத்தில் கழிவு நீரை சுத்தம் செய்ய அனுப்பியது, இரவு நேரத்தில் தொட்டிக்குள் இறக்கியது, ஊழியர்களுக்கு மாஸ்க் கொடுக்காமல் இருந்தது, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் சென்னையை அடுத்த ஆவடியில் இதேபோல் விஷவாயு தாக்கி ஊழியர்கள் பலியானார்கள். குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்த வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications