வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள் - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!
மதுரை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆவதையொட்டி, ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Recommended Video
நாடு முழுவதும் 76-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் தத்தம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைத்து கொண்டாடி வரும் நிலையில், தமிழக தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-ஆவது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. நாள்தோறும் இந்த ரயிலில், சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 5 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள்.
அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும். பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் தொடங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்ல் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு. இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜ்-ல் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் வைகை எக்ஸ்பிரஸ்-ல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமையுடன் இயங்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 45ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் வகையில், கேக் வெட்டியும், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் கொண்டாடினர். மேலும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் பயணிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதனையடுத்து ரயில்வேகோட்ட மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரு வழிப் பயண தூரம் என்று பார்த்தால், 497 கி.மீ. ஆண்டிற்கு 3 இலட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 45 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 73 இலட்சத்தி 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சாதனை படைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications