மதுரையில் பரபரப்பு.. தனியார் வாகனத்தில் 47 கிலோ தங்க நகைகள்.. இதுவரை ரூ. 25 கோடி சிக்கியது
Recommended Video

மதுரை: மதுரையில் தனியார் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 47 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் 70 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மதுரை ஐயர் பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது மதுரையில் இருந்து சேலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு உள்ள வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது முறையான ஆவணங்கள் இன்றி 47 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் வாகனத்தின் ஓட்டுனரிடம் விசாரித்தபோது இது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்று கூறுகையில் 47 கிலோ தங்கம் வைத்திருந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து நிறுத்தி வைத்தனர்.
மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்த வாகனத்தை ஆய்வு செய்ய உள்ளார். இதுவரை சுமார் 25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications