மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி

மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்.

மதுரை அருகே டிபிகே பாலம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வேகமாக சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் சென்றதில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

A bus - bike accident in Madurai kills 4 people: including 3 women

இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர நடுவில் உள்ள தடுப்பை மீறி நிலைதடுமாறி சென்றுள்ளது. வேகமாக சென்ற பேருந்து எதிரே வந்த இரண்டு பைக்குள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் இரண்டு பேர் பெண்கள், ஒருவர் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் திருச்சியை சேர்ந்த ஜோதி என்ற போலீஸ் அதிகாரி, சிறுமி சத்தியவாணி மற்றும் அவரது உறவினர், இளைஞர் ஒருவர் பலியானார்கள்.

இந்த சம்பவம் மதுரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+