மதுரையில் குளிக்க போன மனைவி.. சுடசுட 'அயர்ன்பாக்ஸ்' உடன் காத்திருந்த கணவன்.. ஒரே அலறல்
மதுரை: மதுரையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் முகத்தில் அயர்ன்பாக்ஸ் மூலம் சூடு வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். இதையடுத்த அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த லதாவுக்கு (வயது 24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் வெள்ளையம்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் லதாவுக்கு அதே ஊரைச் சேர்ந்த வீரபாபு என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்ததும் லதாவை, கணவர் கண்டித்தாராம். ஆனாலும் அவர் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை.
இதனால் லதாவை அவருடைய கணவர் விவாகரத்து செய்தார். அதே நேரம் 2 மகள்களையும் அவர் தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து ஹேமலதா கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். வீரபாபு தனது கள்ளக்காதலியை தேடி கேரளா சென்றார்.
அங்கு அவர், லதாவை அழைத்துக்கொண்டு பாலக்காட்டில் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்தள்ளார்கள். லதா பரவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்தாராம். அப்போது லதாவின் நடத்தை மீது வீரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக லதா, குளித்து விட்டு, குளியலறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த வீரபாபு, தான் மறைத்து வைத்திருந்த சூடுப்படுத்திய மின்சார 'அயர்ன்பாக்சை' எடுத்து மனைவியின் முகத்தில் அழுத்தி சூடு வைத்தார்.
இதில் முகம் வெந்து லதா அலறினார். உடனே அங்கிருந்து வீரபாபு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சமயநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய வீரபாபுவை தேடி வருகிறார்கள்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications