Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1200 கிலோ கறி..மதுரையே மணமணக்குது! கரும்பாறை சாமிக்கு கறி படையல்! இலை காய்ஞ்சா தான் பெண்கள் வரணும்.!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே சொரிக்காம்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தி வினோத அசைவ திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் 1200 கிலோ ஆட்டுக்கறியும், 2600 கிலோ அரிசியும் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை என்றாலே அது கறிவிருந்துடன் மட்டுமே நடைபெறும். குறிப்பாக இரவு நேரத்தில் நடைபெறும் வினோத திருவிழாக்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகின்றன.

A men only non vegetarian festival was held at Sorikambatti near Madurai

அப்படி பார்க்கையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோயில், மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழாவில் 70 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கரும்பாறை முத்தையா: மதுரை அருகே சொரிக்காம்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தி வினோத அசைவ திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி ஒன்றியம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ உணவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.

மேய்ச்சல் ஆடுகள்: இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை இங்குள்ளவர்கள் விரட்டமாட்டார்கள்.

125 ஆடுகள்: இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில்., கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 125 கிடாக்களும், 2600 கிலோ அரிசி மூலம் தயார் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த கறி விருந்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.

பெண்கள் சாமி தரிசனம்: இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வருவார்கள். இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான், T.கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+