ஆலய மணி ஒலிக்க.. ஜோதிபாசு மெட்டி அணிவிக்க.. நம்ம நந்தினிக்கு கல்யாணம்.. சந்தோஷமா வாழ்த்துங்க!
சமூக போராளி நந்தினிக்கு அவரது காதலருடன் இன்று திருமணம் நடைபெற்றது
Recommended Video
மதுரை: மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கும் அவரது காதலருக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது.
மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே போராட்டங்களை துவங்கியவர் நந்தினி. குடியின் கொடுமையை நேரில் பார்த்து அனுபவித்த துயரத்தால்தான் நந்தினி குடிக்கு எதிரான போராளியாக உருமாறினார். போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவர் படிப்பை முடித்தார். இப்போது நந்தினி ஒரு வக்கீல்!
கடந்த 5-ம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பள்ளிக்கால நண்பர் குணா ஜோதிபாசுதான் மாப்பிள்ளை. இந்த கல்யாணத்துக்காக நண்பர்கள், உறவினர்களை நந்தினியும் குணாவும் தங்கள் பேஸ்புக் பதிவில் ஆசையுடன் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஜெயில்
ஆனால் 2014ஆம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு காரணமாக மதுரை சிறையில் அடைத்துவிட்டனர். ஒரு வாரத்தில் கல்யாணம் ஆகும்நிலையில், நந்தினியை தந்தையுடன் ஜெயிலில் அடைத்தது பழிவாங்கும் செயலாக கருதப்பட்டது. அதனால் நந்தினியை விடுதலை செய் என்ற கோரிக்கையுடன் ஹேஷ்டேக்கும் உருவானது.

வீடியோ
இது சம்பந்தமாக நந்தினியின் காதலனும், "நந்தினி மீது அப்பட்டமாக போடப்பட்ட பழி இது, கண்டிப்பாக பெயிலுக்கு முயற்சிப்போம். 5-ம் தேதி நடக்க உள்ள திருமணத்தை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு நாள் கல்யாணத்தை நடத்துவோம்" என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே தந்தை ஆனந்தன், சகோதரி நந்தினியை விடுவிக்க நந்தினியின் தங்கையும் சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனாவும் கோரிக்கை விடுத்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரையும் போலீசார் கைது செய்தது.

கல்யாணம்
நந்தினியின் கைதுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நேற்று நந்தினி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலருக்கும் இன்று கல்யாணம் நடந்துள்ளது. கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு எளிய முறையில் இருவரும் கல்யாணம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமண உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

உறுதிமொழி
அதில், "இன்று இல்லற வாழ்வில் இணையும் நாங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இணைபிரியாது ஒற்றுமையுடன் வாழ்வோம் என்றும், இல்வாழ்க்கையிலும், சமுதாய வாழ்விலும் இணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியேற்று கொள்கிறோம்" என்று தம்பதி இருவரும் கூட்டாக சொன்னார்கள்.

மெட்டி
இதையடுத்து, நந்தினிக்கு மெட்டி அணிவித்தார் மாப்பிள்ளை ஜோதி. இந்த கல்யாண வீடியோதான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இளம் வயதிலேயே கைது, வழக்கு என பெரிய பெரிய விஷயங்களை சந்தித்து விட்ட நந்தினி, தனது தடைகளை எல்லாம் தகர்த்துவிட்டு, கணவர் ஜோதியுடன் இல்லற வாழ்க்கையுடனும், சமூகப் பாதையிலும் சிறக்க நாம் மனதார வாழ்த்துவோம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications