படுத்த படுக்கையாக இருந்த ரோபோ சங்கரா இது? நம்பவே முடியலை.. இதுதான் தன்னம்பிக்கை.. வெல்கம் பேக்!
மதுரை: மதுரையில் நடந்த 37-ஆவது ஆணழகன் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் பார்வையாளர்களை கவர்ந்தார்.
தனது மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரோபோ சங்கர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருடைய மகள் இந்திரஜாவும் தற்போது நடித்து வருகிறார். அவருடைய மனைவி பிரியங்காவும் குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார்.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு கிளிகள் வளர்த்து வந்ததாக சர்ச்சை கிளம்பியது. அந்த வெளிநாட்டு கிளிகள் வளர்த்து வந்ததை அடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து அதற்கு ரூ 5 லட்சம் அபராதமும் விதித்தனர்.
இந்த நிலையில் ரோபோ சங்கர் எடை குறைந்து காணப்படுகிறார். அவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதாக நெட்டிசன்கள் பேசி வந்தனர். ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையானதாக அவருடைய மனைவி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒரு கல்லூரி விழாவுக்கு வந்த ரோபோ சங்கர், நான் குடிக்கு அடிமையாகிவிட்டேன்.
இதனால் குடி இல்லாமல் இரவில் தூங்க முடியாமல் தவித்தேன். ஒரு முறை தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்தேன். எனவே மாணவர்கள் யாரும் மது, போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட ரோபோ சங்கர் பழையபடி நடனமாடி ரீல்ஸ் போட்டு வருகிறார்.
மதுரையில் நடந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு தனது உடல் வலிமையை காட்டி அசத்தினார். மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக 37ஆவது மதுரை ஆணழகன் போட்டி மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு உள்ள பூங்கா அருகே நடந்தது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் கே.கே.நகர், பைபாஸ், செல்லூர், மேலூர், கோரிப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு பல கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டது. 40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களது கட்டுடுலை நடுவர்களின் உத்தரவின்படி செய்து காட்டினர்.

இந்த ஆணழகன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் ரோபோ சங்கர் கலந்து கொண்டு கட்டுமஸ்தான உடலை காட்டினார். முதலில் வார்ம் அப் செய்து உடலில் எண்ணெய்யை தடவிக் கொண்டு மேடையில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவரை அவருடைய மனைவி பிரியங்காவும், மகள் இந்திரஜாவும் உற்சாகப்படுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோபோ சங்கர் கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி செய்யாமல் படுத்த படுக்கையாக இருந்தேன். இன்று அதை உடைத்து தன்னம்பிக்கையோடு ஆணழகன் போட்டியில் பங்கேற்றேன். மருத்துவரின் அறிவுரைகளால் என் உடலை தேற்றி வருகிறேன். படுத்த படுக்கையில் இருந்தால் சிலர் மனம் நொந்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். எனவே மன உறுதியாகவும் தன்னம்பிக்கையோடும் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications