நடிகர் சூரி மாடு சுத்தி சுத்தி அடிக்குது.. ஜல்லிக்கட்டில் பெர்ஃபாமன்ஸை நேரில் பார்த்து பூரிப்பு
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரியின் காளை சுத்தி சுத்தி அடித்து தங்க மோதிரத்தை பரிசாக பெற்றது. தனது காளையின் பெர்ஃபாமன்ஸை நேரில் பார்த்து வியந்தார் நடிகர் பரோட்டா சூரி.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காளைகள் சீறிப் பாய தொடங்கியதுமே அதை அடக்க காளையர்கள் தயார் நிலையில் இருந்தனர். இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி உள்ளிட்டோர் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டை ரசித்தனர். ஜல்லிக்கட்டில் முக்கிய பிரமுகர்களின் வளர்ப்பு காளையும் போட்டியிட்டன.

அவனியாபுரம்
அவனியாபுரம், சூரியூர் ஜல்லிக்கட்டுகளில் களமிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அலங்காநல்லூரிலும் களமிறங்கி வெற்றி பெற்றது. இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும் வென்றது. அது போல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் காளை களமிறங்கிய நிலையில் யாருக்கும் பிடி கொடுக்காமல் வென்றது.

2 மாடுகள்
நடிகர் சூரியின் சார்பில் 2 மாடுகள் களமிறங்கின. 3ஆவது சுற்றில் களமிறங்கிய சூரியின் காளை பிடி கொடுத்த நிலையில் அடுத்து 4ஆவது சுற்றில் களமிறங்கிய அந்த காளை வெற்றி பெற்றது. அந்த காளையை இறக்கும் போதே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடிகர் சூரியின் காளை என்றே சொல்லி அழைத்தனர். மேலும் சூரியின் மாடு யாருக்கும் பிடிபடாமல் இருந்ததை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் "நடிகர் சூரியின் மாடு சுத்தி சுத்தி அடிக்குது" என்றார்கள்.

தங்க மோதிரம்
மேலும் சூரியின் மாடு தங்க மோதிரம் ஜெயித்ததாக அறிவித்தார்கள். உடனே விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மோதிரத்தை நடிகர் சூரிக்கு அணிவித்தார். உடனே சூரியும் அந்த மோதிரத்தை வாங்கி தனது மாட்டை பாதுகாக்கும் நபரிடம் கொடுத்தார். இந்த போட்டியில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் காளை வென்றது.

ஆர் பி உதயகுமார்
அது போல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும் வென்றது. நடிகர் சூரி சார்பில் காளைகள் களமிறங்கின. முதல் காளை பிடிபட்ட நிலையில் மற்ற 2 காளைகளும் வெற்றி பெற்றன. பார்வையாளர் மாடத்தில் இருந்து அமைச்சர் உதயநிதியும் சூரியும் சிரித்தபடி பார்த்து ரசித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications