விவேகானந்தரின் விஜயமே.. நல்லாட்சி தருக.. மதுரையில் அதகளப்படும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்
மதுரை: விவேகானந்தரின் விஜயமே, நல்லாட்சி தருக என மதுரையில் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே விஜய் திருமண நாளின் போது விஜயை எம்ஜிஆராகவும் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது இந்த உலகிற்கு புதிதல்ல. அரசியலில் பெட்டிக் கடைக்காரர் முதல் ஹாலிவுட் ஆர்டிஸ்ட் வரை ஏராளமானோர் அரசியலில் ஜொலிக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என சினிமாவிலும் நாடகத்திலும் நடித்தவர்கள் அரசியலில் தங்களுக்கென ஒரு முத்திரை பதித்தனர்.
அது போல் ரஜினிகாந்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். நடிகர் விஜயையும் சிம்புவையும் சூர்யாவையும் அரசியலுக்கு அழைத்து வருவது தொடர்கதையாகியுள்ளது.

ரெய்டு
இந்த நிலையில் நடிகர் விஜயின் சர்கார் திரைப்படம், அண்மையில் நடந்த ரெய்டு ஆகியவற்றிற்கு விஜய்க்கு அவரது ரசிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். கடந்த வாரம் விஜய்- சங்கீதாவுக்கு 20-ஆம் ஆண்டு திருமண விழாவையொட்டி மதுரையில் வினோதமான போஸ்டரை ஒட்டியிருந்தனர்.

சங்கீதாவுக்கு அழைப்பு
அதில் புரட்சித் தலைவியே- புரட்சித் தலைவரே என சங்கீதாவையும் விஜயையும் அழைத்த ரசிகர்கள், அவர்களை ஜெயலலிதாவாகவும் எம்ஜிஆராகவும் சித்தரித்திருந்தனர். இதன் மூலம் விஜய்யை போல் அவரது மனைவியையும் ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தது.

போஸ்டரில் ரசிகர்கள்
இந்த நிலையில் விவேகானந்தர் படத்தை போஸ்டரில் போட்டுள்ள ரசிகர்கள் விஜய்யும் காவி உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர். மேலும் நாடு நலம் பெற 100 இளைஞர்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர். தளபதியே உன்னிடம் இருப்பதோ பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

நல்லாட்சி தருக
மேலும் விவேகானந்தரின் விஜயமே வருக.. நல்லாட்சி தருக.. என போஸ்டரில் குறிப்பிட்டு அது வைரலாகி வருகிறது. ஏற்கெனவே எம்ஜிஆர், ஜெயலலிதாவாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து அதிமுகவினர் கூறுகையில், சின்னப்பசங்க ஏதோ புரியாமல் ஒட்டிவிட்டனர் என்றது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
டெல்லியை நோக்கிப் பாயும் தவெக-வின் முதல் 'அம்பு'.. ராஜ்யசபா எம்.பி.. விஜய்யின் சாய்ஸ் யார்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்!










Click it and Unblock the Notifications