Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருகிட்டயும் ஏமாறாதீங்க.. பெண்கள் ரொம்ப கவனமா இருக்கனும்! 30 வருட ரகசியத்தை உடைத்த நடிகை தேவயானி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், நம்மை யாரும் ஏமாற்றவும் கூடாது, நாமும் ஏமாறவும் கூடாது, ஏமாற்றுபவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் நடிகை தேவயானி. மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் தான் மேக்கப்பிற்கு பயன்படுத்தும் பொருள் குறித்து பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் 33வது தென்னிந்திய மாநாடு மற்றும் உலக நுகர்வோர் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.

Actress Devayani cinema madurai

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய அவர்,"மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய சூட்டிங் இருக்கு இங்கு வந்து இருக்கிறேன் ரொம்ப அன்பான ஊரு. மதுரை மீனாட்சியின் அருள் இங்கு இருக்கு. அதனால் எனக்கு மதுரை ரொம்ப பிடிக்கும். அவ்வப்போது மதுரை வந்திருக்கிறேன்.

தினசரி நாம் ஏதாவது ஒரு வகையில் பொருட்களை வாங்குவதில் குறைபாடுகள் இருந்தால் அதை எப்படி கையாள வேண்டும் யாரை சந்திக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பெண்களாகிய நமக்கு தேவை. சின்ன சின்னதா இருக்கும் சில நேரங்களில் அதை நாம் கண்டுகொள்ளாமலும் இருப்போம். இதை செய்தால் பெரிய பிரச்சனை ஆகி விடுமோ என்று பயப்படுவோம். ஆனால் இந்த சின்ன பிரச்சனை நமக்கு ஒரு ஏமாற்றமாக நடந்து போயிடக் கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிலும் நாம் அலட்சியத்தோடு இருந்துவிடக் கூடாது.

சின்னத்திரையாக இருக்கட்டும் பெரிய திரையாக இருக்கட்டும் எனக்கு இவ்வளவு அன்பு இவ்வளவு ஆதரவு இத்தனை வருடங்களாக நீங்கள் அனைவரும் கொடுப்பதற்கு மிகவும் நன்றி. தரமான பொருட்களை நாம் எப்போதும் வாங்க வேண்டும் தரமான இடத்திலிருந்து வாங்க வேண்டும் வாங்கும் போது அந்த பொருட்களை படித்துப் பார்த்து வாங்க வேண்டும்.

இன்றைக்கு ஆன்லைனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனம் புதிதாக உதயமாகி வருகிறது. குறிப்பாக 40 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏங்குகிற தரமான நிறுவனங்களிடம் இருந்து நாம் பொருட்களை வாங்க வேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக நான் திரைத்துறையில் நடித்து வருகின்றேன். குறிப்பாக நடிகைக்கு மேக்கப் நிச்சயம் தேவை மேக்கப் இல்லாமல் நடிக்க முடியாது. மேக்கப் என்றால் அதில் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கிறது. விதவிதமான பெரிய பெரிய நிறுவனங்கள் மேக்கப் சாதனங்களை விற்பனை செய்து வருகின்றன.

குறிப்பாக எனக்காக எனது நடிப்பில் முக்கியமானது ஒன்று என்றால் அது மேக்கப் சாதனங்கள் தான். நான் பொதுவாகவே தரமான பொருட்களை தான் வாங்குவேன். உங்களுக்கும் அதைத்தான் சொல்கின்றேன். இப்போது இருக்கக்கூடிய இளம் பெண்களுக்கு தரமான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. இன்று நாம் கையாளக்கூடிய செல்போன்களில் எத்தனையோ புதுவிதமான மக்களை கவரும் வண்ணம் விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கவர்ச்சிகரமான துண்டு சீட்டு விளம்பரங்களையும் டிஜிட்டல் விளம்பரங்களையும் பார்த்து ஏமாந்து விடக்கூடாது.

குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் கைபேசியையும் அதில் வரக்கூடிய விளம்பரங்களையும் பார்த்து பெண்களாகிய நீங்கள் ஏமார்ந்து விடக்கூடாது. யாரையும் நாம் ஏமாற்ற விடக்கூடாது. எமாற்றுபவர்களிடமிருந்து நாமும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். நம்மை ஏமாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது யாரும் நம்மை ஏமாற்றவும் விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

பெண்கள் தான் ஒவ்வொரு வீட்டினுடைய தூண்கள் எனவே பெண்களாகிய நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் குரல் கொடுக்க வேண்டும். தைரியமாக பேச வேண்டும் எதுவென்றாலும் பேசினால் தான் வெளியில் தெரியும், பேசாமல் மௌனிப்பது நல்லதல்ல, எனது குழந்தைகளுக்கு கூட நான் அடிக்கடி சொல்லுவது எதுவாக இருந்தாலும் பேசுங்கள் பெற்றோர்களிடத்தில் சொல்லுங்கள் என்பதுதான்..
பொதுவாக நான் மேக்கப் போடுவதில்லை இருந்தாலும் மேக்கப் போட்ட பிறகு அதை கலைப்பதற்கு எத்தனையோ பொருட்கள் இருக்கின்றது. ஆனால் அவற்றையெல்லாம் நான் பயன்படுத்துவது கிடையாது.

நான் போடும் மேக்கப் பை கலைப்பதற்கு நான் இன்று வரை பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் மட்டும்தான். எனது பாட்டி கால முதல் அவருடைய பாட்டி காலம் முதற்கொண்டு நாங்கள் அனைவரும் பயன்படுத்துவது தற்போது வரை தேங்காய் எண்ணெய் ஒன்றுதான் என்பது உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன், என்னை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றி விட முடியாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+