Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேத்துகிட்ட மன்னருக்காக.. வார்த்தையை விட்ட கஸ்தூரி! போலீசுக்கு பறந்த புகார்.. பென்டிரைவ் வேற இருக்கே

Subscribe to Oneindia Tamil

மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் நடிகை கஸ்தூரி அதற்கு விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாயுடு மகாஜன சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான செயல்கள் நடைபெற்று வருவதாகவும், அவர்களை இழிவு படுத்தி பேசுவது, பூணூல் அறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது என புகார் கூறி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kasthuri tamil actress madurai

குறிப்பாக பிராமணர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கைன் நாராயணன், நடிகை கஸ்தூரி, நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளும் நடிகையுமான மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி பேசிய பேச்சு தான் தற்போது பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

பிராமணர்களை சிலர் தமிழர்கள் இல்லை என்று சொல்வதாக பேசிய அவர், யார் தமிழர் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த தெலுங்கு பேசும் மக்கள் தமிழர்கள் என்றால் 3000 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த பிராமணர்களும் தமிழர்கள்தான் என பேசி இருந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் பேசிய பேச்சு தான் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மன்னர் தனது அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசினார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும் போது எப்பவோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்க யார்? என்று பேசினார்.

இது தமிழகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி பேதம் இன்றி தெலுங்கு பேசும் மக்கள் ஒன்று திரண்டு கஸ்தூரிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டரோடு, பல்வேறு நாயுடு நாயக்கர் இன அமைப்புகளும் கஸ்தூரிக்கு எதிராக போர் கொடி தூக்கின.

அதே நேரத்தில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் திமுக ஆதரவாளர்கள் தனது பேச்சை திருத்தி பரப்புவதாக கஸ்தூரி விளக்கம் அளித்து இருந்தார். மேலும் தான் தெலுங்கு மருமகள் என பேசியதோடு, தெலுங்கு தமிழும் எனது இரு கண்கள் எனக் கூறியிருந்தார். அதே நேரத்தில் கஸ்தூரி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

kasthuri tamil actress madurai

அந்த வகையில் கஸ்தூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் போஸ் நாயுடு மனு அளித்துள்ளார். அந்த மனுவில்,"நான் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் மாநில பொதுச்செயலாளராக உள்ளேன். தமிழ்நாட்டில் எந்த மொழி, இன் பாகுபாடின்றி அனைவரும் சமமாக அமைதியாக ஒற்றுமையுடன் சமுதாயத்தில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 03.10.24 அன்று நடிகை கஸ்தூரி என்பவர் தெலுங்கு பேசும் இனமான எங்கள் நாயுடு குல சமுதாய பெண்களை இழிச்சொல் கூறியும் இன குலத்தோரையும் நாடாண்ட மன்னர்களையும் இழிவுபடுத்தும் நோக்கோடும் தமிழ்நாட்டு மக்களிடையே பிரிவினைவாதத்தையும் இனப்பிரச்னைகளையும் தூண்டி விடும் உள்நோக்கத்தோடு சாதிய இழிச்சொற்களை பேசி எங்கள் சமுதாய மக்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்கு தன்னுடைய உட்படுத்தி சுய விளம்பரத்திற்காகவும் சிலருடைய பின்புலத்தில் செயல்பட்டு அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு மேற்படி அவச்சொற்களை ஒரு பொது நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

kasthuri tamil actress madurai

எனவே தமிழக மக்களின் ஒற்றுமையை குலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு பேசி வரும் மேற்படி நடிகை கஸ்தூரி மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.:" என கூறப்பட்டுள்ளது. அதனுடன் கஸ்தூரி பேசியதான் எழுத்துப்பூர்வ பிரதியும், அவர் பேசிய வீடியோ அடங்கிய பென் டிரைவும் இணைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+