உதயநிதியிடம் கைகட்டி நிக்கிறாரே கமல்ஹாசன்.. நடிகை விந்தியா கிண்டல்.. கடுப்பில் திமுக , மநீம

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறாரே கமல்ஹாசன் என மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான டாக்டர் சரவணனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Actress Vindhya badly criticises Kamal haasan

அப்போது அவர் கூறுகையில் திமுக கூட்டணியில் இப்போது ஒரு மானஸ்தன் சேர்ந்திருக்கிறார். அவர்தான் கமல்ஹாசன். ரொம்ப ரோஷக்காரர். பொதுவாக சீப்பான விலை கம்மியான துணியை வாங்கினால் அது தண்ணீரில் பட்டாவே சாயம் போகும்.

ஆனால் கமல் ஹாசனோ தண்ணீரே படாமல் சாயம் போகிறார். கலைஞரின் மகன் ஸ்டாலின் என சொல்வதே கெட்ட வார்த்தைனு நினைத்திருந்த கமல்ஹாசன் இன்று கூட்டணிக்காக ஸ்டாலின் மகன் உதயநிதிகிட்ட கை கட்டி உட்கார்ந்துக்கிட்டு இருந்தார். அவர் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தார்.

அப்போது அவருடைய கட்சிக்காரங்க கேட்டாங்களாம். "என்ன சார் நம்ம நிலைமை" னு கேட்டாங்களாம். அதற்கு அவர் "நம்மை டார்ச்லைட்டிலேயே நிற்கச் சொன்னாங்க"ன்னு சொன்னாராம். உடனே அவர்கள் எல்லாம் "அப்படியா சார் எத்தனை தொகுதி, எந்த தொகுதி"னு கேட்டாங்களாம். அதற்கு கமல், "தொகுதியெல்லாம் இல்லை டார்ச்லைட்டை புடுச்சிக்கிட்டே நிக்க சொன்னாங்க"ன்னு சொன்னாராம்.

இந்த அழகுல கட்சி ஆரம்பிக்கும் போது டார்ச்லைட்டை வீசி டிவியை எல்லாம் உடைச்சு திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பிச்ச கமல்ஹாசன், அன்னைக்கே டார்ச்லைட்டை வீசியது டார்ச்லைட்டை உடைக்கதான். டிவியை உடைக்க அல்ல. யாரோ ஒரு மானஸ்தன், உண்மையான நண்பர் போய் கமலிடம், கேட்டாராம்.

"என்னசார் டிவிலாம் உடைச்சிட்டீங்க, திமுகவை எதிர்த்தீங்க, இன்று அதே கட்சியுடன் கூட்டணி வச்சிருக்கீங்களே, இது நல்லா இருக்கா"னு கேட்டாராம். அதற்கு கமல், " டிவி உடைஞ்சா என்னப்பா ரிமோட் என்கிட்ட தானே இருக்கு" னு சொன்னாராம். இது எவ்வளவு முட்டாள்தனம். இது எப்படி இருக்குனா, பொண்டாட்டி ஓடி போனா என்ன அவ புடவை இன்னமும் வீட்டுக்குள்ளதான் இருக்குனு சொல்ற மாதிரி இருக்கு.

இவங்க எல்லாம் எந்த அறிவை நம்பி அரசியலுக்கு வந்து அரசியல் பண்றாங்கன்னு தெரியலை என விந்தியா காட்டமாக பேசினார். இதற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் விந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சற்றும் நாகரீகம் இல்லாமல் இப்படியா பேசுவது என கேட்கிறார்கள். அவர் திமுக கூட்டணிக்கு ஏன் போனார் என்பதை விளக்கிவிட்டார் அதன் பிறகும் விந்தியா இவ்வாறு பேசுவது சரியில்லை என ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

அது போல் விந்தியா சிவகங்கை தொகுதியில் பேசிய போது காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் போட்டியிடுவதற்கே ஆள் இல்லை. திமுகவிடம் 6 என காங்கிரஸ் எழுதி கொடுத்ததை திமுக தலைமை 9 என நினைத்து 9 சீட்டுகளை கொடுத்துவிட்டனர். ஆனால் போட்டியிட ஆள் இல்லாததால் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கே சீட்டு கொடுத்துவிட்டனர். சொந்த தொகுதியில் ஒரு நிறுவனத்தை தொடங்கி கார்த்தி சிதம்பரம் ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தராதது ஏன் என நடிகை விந்தியா கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+