தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது… டிடிவி தினகரன் கலகல
Recommended Video

மதுரை: தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது என்று அமமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா கூட்டணியில் அதிமுக, திமுக கூட்டணிகள் இறுதியாகி விட்டன. அமமுக தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது. மற்ற கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளன.
இந் நிலையில், அமமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலுக்கு சின்னம்
இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவுதான் அமமுக.

உரிமைக்காக போராடும்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை கட்சியின் பெயரை எப்படி பதிவு செய்ய முடியும்? அதிமுக மீதான உரிமைக்காக போராடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் கட்சியை பதிவு செய்யவில்லை.

கூட்டணி பேச்சுவார்த்தை
குக்கர் சின்னம் தமிழகம் முழுவதிலும் சென்று சேர்ந்துள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அம்மாவிற்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களும், தொண்டர்களும் எங்களுடன் உள்ளனர்.

38 தொகுதிகளில் வெற்றி
நாங்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, 38 தொகுதிகளிலாவது வெல்வோம். அதிமுக கூட்டணி மானங்கெட்ட கூட்டணி.

அதிமுக கூட்டணி
ஓபிஎஸ் விரைவில் பாஜகவோடு இணைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது. திமுக ஒரு பயில்வான்கூட்டணி... பாமக மானங்கெட்ட கூட்டணி.

கவலை கிடையாது
ஒரு பஸ்ஸில் ஏறி மறுபஸ்ஸில் ஏறி வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை. எங்கள் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு போறவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

மக்கள் இருக்கின்றனர்
மக்களும் எங்கள் தொண்டர்களும் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்க சின்ன கட்சி விரலுக்கு ஏற்ற வீக்கம் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அத்தியாயம் படைப்போம் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications