பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி.. சாதித்து காட்டுபவன்.. திமுகவுக்கு பொய்தான் மூலதனம் - எடப்பாடி
மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு பொய் தான் மூலதனம். ஆனால் இந்த பழனிசாமி பொய் பேசுபவன் இல்லை.. சாதித்து காட்டுபவன் என்று பேசினார்.
அதிமுக மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரமாண்ட கூட்டம் இது என்பதால் தமிழக அரசியலிலும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் இந்த மாநாடு நடைபெற்றது. சுமார் 63 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைத்து இந்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் பங்கேற்க நேற்று முதலே அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயிலிலும் அதிமுகவினர் புறப்பட்டு சென்றனர். அதேபோல், வேன், கார்கள் என நேற்று மாலை முதலே அணிவகுத்து சென்றனர். இன்று காலை முதல் மாநாடு தொடங்கியது. அதிமுக மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் இருப்பதற்கான நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.
லட்சகணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில், காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரோபோ சங்கர், மதுரை முத்து, ராஜலட்சுமி - செந்தில் உள்ளிடோர் பங்கேற்றனர். அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேச துவங்கினார்.
அப்போது, அம்மா மினி கிளினிக், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், குடிமராமத்து திட்டம், ஏரிகளை தூர்வாரியது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது என அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி பேச தொடங்கினார். தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பிறகு திமுகவை விமர்சிக்க தொடங்கினார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பொய் பேசுவபன் இந்த பழனிசாமி இல்லை.. சாதித்து காட்டுபவன் என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுகவுக்கு அனைத்தும் பொய்தான்.. திமுக முழுக்க முழுக்க பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்தனர். திமுகவுக்கு பொய் தான் மூலதனம்.. ஆனால் பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி.. சாதித்து காட்டுபவன்.. இவர்களே நீட் தேவை கொண்டுவந்துவிட்டு.. இப்போது இவர்களே விலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்காங்க"என்றார்.












Click it and Unblock the Notifications