மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிடிஆர் சொன்ன "அந்த" ஒற்றை வார்த்தை! டக்கென எழுந்த செல்லூர் ராஜூ.. சீனுக்குள் வந்த அமைச்சர் மூர்த்தி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசின் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் பிடிஆர் பேசிக் கொண்டு இருந்த போது. திடீரென அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் அங்குச் சற்று நேரம் பரபரப்பான சூழல் அங்கு நிலவியது.

 ஒரே விமானம்.. ஒன்றாக வந்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்! குவிந்த பிடிஆர், ஓபிஎஸ் தொண்டர்கள் ஒரே விமானம்.. ஒன்றாக வந்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்! குவிந்த பிடிஆர், ஓபிஎஸ் தொண்டர்கள்

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சி அமைத்து ஓராண்டு ஆன பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில், புதிய திட்டங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்து இருந்ததாக அதில் கூறியிருந்தார்.

கடிதம்

கடிதம்

மேலும், தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்புமாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானதை மட்டும் பட்டியல் அனுப்புமாறு முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 கோரிக்கை

கோரிக்கை

அதைத் தொடர்ந்து திமுக, அதிமுக என அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதியில் நீண்ட காலமாக இருக்கும் டாப் 10 பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அனுப்பினர். இந்தச் சூழலில் நேற்றைய தினம் மதுரை கலெக்டர் ஆபீசில் இருக்கும் கூட்டரங்கில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்" கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்கள் கொடுத்த 10 கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

 அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுக எம்எல்ஏக்கள்

இதில் வணிக வரி அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

இந்தக் கூட்டத்தின் இறுதியில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்களைக் குறித்துப் பேசினார். அப்போது தமிழக வரலாற்றில் முதல்முறையாக இப்படியொரு ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

 புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இதைக் கேட்டதும் அதிமுக எம்எல்ஏக்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் டென்ஷனார்கள். அமைச்சர் பிடிஆரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துகளைத் தெரிவித்தனர். மேலும், ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு அந்த அரங்கத்தில் இருந்து வெளியே செல்ல முற்பட்டனர். அப்போது டக்கென எழுந்த அமைச்சர் மூர்த்தி அதிமுக எம்எல்ஏக்களை சமாதானம் செய்து அமர வைத்தார்.

 செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

திமுக மூத்த அமைச்சர் கேட்டுக்கொண்ட பின்னரே அவர்கள் சற்று அமைதியானார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய செல்லூர் ராஜூ, "நாங்கள் மக்கள் பிரச்சினை குறித்துக் கேட்டோம். அதற்கு அமைச்சர் பிடிஆர் அரசு அதிகாரி போலப் பேசுகிறார். இப்படிப் பேசினால் நாங்கள் என்ன செய்வது.

கோரிக்கை

கோரிக்கை

மதுரையில் மட்டும் முதியோர் உதவித் தொகை 2 லட்சம் பேருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடே முறையாக நடைபெறுவதில்லை. அப்படியிருக்கும் போது கோரிக்கைகளை மட்டும் கேட்டுக்கொண்டால் என்ன பயம். எனக்கு இது புரியவே இல்லை. வரும் சட்டசபைத் தேர்தலில்ல எடப்பாடி பழனிசாமி மக்கள் பற்றிக் கண்டிப்பாகப் பேசுவார்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Minister Palanivel Thiagarajan's speech made admk mlas angry:ADMK MLAs tried to walk out in middle of govt function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X