'எய்ம்ஸ் செங்கலை கொண்டுபோய் விளம்பரம் தேடுனாங்களே.. ஆனா இப்போ?'.. முன்னாள் அமைச்சர் காட்டம்!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டியதோடு சரி அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. நெடுநாள் போராட்டத்துக்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

மதுரை எய்ம்ஸ்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடந்த பிரசாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மிக கடுமையாக எதிரொலித்தது. அதாவது தற்போதய திமுக எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தை கடுமையாக கிண்டல் செய்து பிரசாரம் செய்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான செங்கலை பிரசாரத்தின்போது கையோடு கொண்டு சென்ற அவர் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

ஒரு செங்கலைக் கூட நடவில்லை
இந்த நிலையில் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசு எய்ம்ஸ் மருத்துவமனையைக் குறிப்பிட்டு செங்கல் வைத்து விளம்பரம் தேடியது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு செங்கலைக் கூட நடவில்லை என்று குற்றம்சாட்டினார். இன்று தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசுதான் காரணம்
ஓரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கித் தந்த பெருமை அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரைதான் சேரும் என்று கூறிய ஆர்.பி.உதயகுமார் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அதிமுக அரசே சட்டம் இயற்றியது என்று கூறினார். இதேபோல் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்டத்தையும் அதிமுக அரசே பெற்றுத் தந்தது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் கோரிக்கை
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். சென்னையில் இருந்தபடி இந்த நிகழ்ச்சியில் ககலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுவிக் மாண்ட்யாவிடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தது குறிபிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications