வாவ்.. வாக்காளர்களுக்கு இப்படியும் பணம் தரலாமா.. செம ஐடியாவா இருக்கே.. பரபரக்கும் மதுரை
Recommended Video

மதுரை: மதுரையில் வாக்காளர்களுக்கு வித்தியாசமான முறையில் பணம் தரும் வேலையில் அதிமுகவினர் இறங்கியிருப்பதாக ஒரு புகார் கிளம்பியுள்ளது.
தேர்தல் வந்தால் முன்பெல்லாம் வேட்பாளர்கள் வருவார்கள், செய்ததைச் சொல்வார்கள், செய்யப் போவதைச் சொல்வார்கள். வாக்கு சேகரிப்பார்கள், போவார்கள். ஆனால் இப்பெல்லாம் காசு, பணம் துட்டு மணி மணி என்றாகி விட்டது.
இந்த நிலையில் மதுரையில் தேர்தல் வருவதற்கு முன்பே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆயத்த நடவடிக்கைளை கட்சிகள் தொடங்கி விட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வரை புகார் போயுள்ளது.

எதற்கு கேட்கிறீங்க செல் நம்பர்
பாராளுமன்றத் தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே அ.தி.மு.க.வினர் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி.பி.எம்., காங்கிரஸ், சி.பி.ஐ, ம.தி.மு.க, ஜே.டி.யூ., மக்கள் நீதி மய்யம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

ஓட்டு வாங்க
இது குறித்து சி.பி.எம்., கட்சியை சார்ந்த திலகர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஆளும்கட்சியான அதிமுக தேர்தலுக்காக கொள்கையோ அவர்கள் செய்த சேவை பற்றி மக்களிடம் பேசாமல் குறுக்கு வழியில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து விடலாம் என முயற்சி செய்து வருகிறது. மக்களுக்கு சேவை நல்ல திட்டம் என எதுவும் கொண்டு வராத காரணத்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஸ்டைலே வேற மாதிரி
தேர்தலுக்கு முன்னரே முதல்கட்டமாக பணம் பட்டுவாடா செய்வதற்கு வாக்காளர்களின் செல்போன் நம்பர்களை சேகரித்து வருகின்றனர்., அதுவும் நேரடியாக சேகரித்தால் காவல்துறையினருக்கு சந்தேகம் வரும் என்பதால், பால் விற்பனையாளர்கள், தண்ணீர் கேன் போடுபவர்கள், கேபிள் பணம் வசூல் செய்பவர்கள், இப்படியானவர்கள் மூலம் ஈடுபடுத்தி வருகின்றனர்.

செல்லூரில் தீவிரம்
நாங்கள் வசிக்கும் மதுரை செல்லூர் பகுதியில் தீவிரமாக செல்போன் எண்களை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர், மேலும் போலீஸ் கமிஷனர் அவர்களுடைய புகார் அளிப்போம் என தெரிவித்துள்ளனர்
20 ரூபாய் டோக்கன் பார்த்திருக்கிறோம்.. குடத்துக்குள் மோதிரம், மூக்குத்தி கூட பார்த்திருக்கிறோம்.. இந்த செல் மாடல் புதுசா இருக்கே.. எப்படி பணத்தைப் போட்டு விடுவாங்க.. பயங்கர ஆர்வமா இருக்கேய்யா.. மதுரைக்காரங்கே எப்பவே தினுசாதாய்யா யோசிப்பாங்கே. ரொம்பக் கலக்குறாங்களே பீதியை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications