மதுரை அதிமுகவுக்கு மீண்டும் தோல்வி.. மன்னன் விவகாரத்தில் கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
மதுரை: மதுரையில் மு.க.அழகிரியின் மொத்த ஆதரவாளர்களையும் கூண்டோடு தூக்க அதிமுக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. கடைசி நேரத்தில் முன்னாள் துணை மேயர் மன்னனை தவிர்த்து அத்தனை முக்கிய ஆதரவாளர்களும் எஸ்கேப் ஆகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் அதிமுக தலைமையும் அப்செட்டாகி இருக்கிறது.
2014ஆம் ஆண்டுக்கு பின் மதுரையில் மு.க.அழகிரியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் அழகிரியின் ஆதரவாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினர். தொடர்ந்து திமுக மொத்தமாக ஸ்டாலினின் கைகளுக்குள் சென்ற பின்னர், மு.க.அழகிரியின் சில ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர். குறிப்பாக தளபதி, எஸ்ஸார் கோபி, ஜெயராம் ஆகியோர் ஸ்டாலின் பக்கம் சென்றனர்.

இருந்தாலும் மு.க.அழகிரியின் விஸ்வாசிகள் பலரும் அவருடன் இருந்து வந்தனர். எந்தவித அரசியல் செயல்பாடுகளும் இல்லாமல், திமுகவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினர். மன்னன், இசக்கிமுத்து, உதயகுமார், எம்எல் ராஜ், கோபிநாதன், முபாரக் மந்திரி, சின்னா உள்ளிட்ட பலரும் எந்தவித அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தனர்.
அண்மையில் கூட ஸ்டாலின் திண்டுக்கல் வந்த போது மன்னன் அவரை சந்தித்து திமுகவில் பணியாற்ற வாய்ப்பு கோரி இருந்தார். ஆனால் ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தளபதி என்று மூன்று முக்கிய நிர்வாகிகள் இருக்கிறார்கள். தற்போது அழகிரியின் ஆதரவாளர்களை சேர்த்தால், அது சிக்கலாகும் என்று ஸ்டாலின் கருதினார். இதனால் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மூலமாக மன்னன் தரப்புடன் அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை நடத்தியது. மதுரையில் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்து வருவதால், அழகிரியின் ஆதரவாளர்களை கட்சியில் இணைக்க தீவிரம் காட்டினர். அதற்கேற்ப ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவான ஜனவரி 24ல் மதுரையில் மிகப்பெரிய விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதிமுக ரகசியமாக வைத்திருந்தாலும், திமுக கண்டறிந்தது. இதன்பின் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் பார்க்கலாம் என்று திமுக தரப்பில் சிக்னல் கொடுக்கப்பட, இந்த விவகாரம் அதிமுகவுக்கும் தெரிந்துவிட்டது. இதனால் அவசர அவசரமாக நேற்றே மன்னன் தரப்பை கட்சியில் இணைத்திருக்கின்றனர்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications