அவசர அவசரமாக மாநாட்டுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி.. திடீரென சிகப்பு சட்டை செய்த செயலால் பரபரப்பு
மதுரை: தான் தங்கியிருந்த அறையில் இருந்து மதுரை மாநாட்டு மேடைக்கு பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி வந்து கொண்டிருந்த போது வேன் முன்பே தொண்டர்கள் விழுந்து கும்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து தங்கள் டேட்டாக்களில் மாற்றம் செய்துள்ளது.

எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவியை எதிர்த்து ஓபிஎஸ் போட்ட வழக்குகளை எல்லாம் தாண்டி தான் வெற்றி பெற்ற நிலையில்தான் நேற்றைய தினம் மதுரை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையை பொருத்தவரை ஒரு ரயில் முழுக்க தொண்டர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அது போல் மதுரைக்கு சுற்றுவட்டார மாவட்டங்களான திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் வாகனங்ளில் திரண்டு வந்திருந்தனர்.
காலை 8 மணிக்கே எடப்பாடி பழனிசாமி கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கினாலும் மாலையில்தான் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என திட்டமிடப்பட்டிருந்தது. அதனால் அண்டை மாநிலத்தினர் காலை புறப்பட்டால் மாலையில் விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிடலாம் என கருதி காலையில் புறப்பட்டனர்.

ஆனால் போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை விட்டு இறங்கியவர்கள் நடந்தே சென்றனர். மதுரை வந்த வாகனங்கள் விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி காலையில் கொடியேற்ற வந்தார்.
அதிமுக 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதாவது 50 ஆண்டுகள் முடிந்து 51 ஆண்டு தொடங்கியுள்ளது. இதை குறிக்கும் விதமாக 51 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றிய போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டன. இதனால் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
முன்னதாக விழா மேடைக்கு பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி வரும் போது சாலையில் இரு மருங்கிலும் தொண்டர்கள் நின்றிருந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கட்சிக் கொடியுடன் நின்று கோஷமிட்டனர். பின்னர் சிலர் எடப்பாடிக்கு இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தனர்.
சிலர் துள்ளி குதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் சிவப்பு சட்டை அணிந்த ஒரு தொண்டர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுவதை போல் அவர் அமர்ந்திருந்த வேனின் முன்பு விழுந்து கும்பிட்டார். இந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் அவர் கோட்டைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் வரும் போது அமைச்சர்களாகவும் எம்எல்ஏக்களாகவும் எம்பிக்களாகவும் இருந்தவர்கள் கார் டயருக்கு முன்பு விழுந்து கும்பிடுவார்கள். இதற்காக அவர்களை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க












Click it and Unblock the Notifications