மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 2 கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையில், அதிமுக சார்பாக களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மேற்கில் செல்லூர் ராஜு, திருமங்கலம் ஆர்பி உதயகுமார், திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா, மதுரை வடக்கு தொகுதியில் சரவணன், மதுரை கிழக்கு தொகுதியில் மாங்குளம் கே.மகேந்திரன், சோழவந்தான் மாணிக்கம், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன், மேலூர் பெரியபுள்ளான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பாக போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு மீண்டும் மதுரை மேற்கு தொகுதியிலும், ஆர்பி உதயகுமார் திருமங்கலம் தொகுதியிலும், சிட்டிங் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

8 தொகுதிகளில் அதிமுக
கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 5ல் அதிமுகவும், 5ல் திமுகவும் வென்றது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வசமும், மதுரை மத்திய தொகுதி புதிய நீதி கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் யார்?
அதன்படி மதுரை வடக்கு தொகுதியில் சரவணன், மதுரை கிழக்கு தொகுதியில் மாங்குளம் கே.மகேந்திரன், சோழவந்தான் மாணிக்கம், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன், மேலூர் பெரியபுள்ளான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் பாஜக சார்பாக மருத்துவர் சரவணன் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இம்முறை அதிமுக சார்பாக மீண்டும் களமிறங்குகிறார்.
உசிலம்பட்டியில் யார் போட்டி?
அதேபோல் அதிமுகவின் கோட்டையான மேலூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ பெரியபுள்ளானுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான மதுரை கிழக்கில் இம்முறை மாங்குளம் கே.மகேந்திரனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் திமுக பக்கம் சென்றுவிட்ட சூழலில், கடந்த முறை அமமுக சார்பாக போட்டியிட்ட அதிமுகவில் இணைந்திருந்தார்.
அதிமுக கொடி நாட்டுமா?
இதனால் உசிலம்பட்டி தொகுதியில் ஐ.மகேந்திரன் களமிறங்குகிறார். அதேபோல் சோழவந்தான் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.மாணிக்கம் என்பவருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் அதிமுக மீண்டும் கொடி நாட்டுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications