ஓ.பன்னீர்செல்வம் விரிக்கும் வலை! நைஸாக நழுவும் செல்லூர் ராஜூ! கண்கொத்தி பாம்பாக எடப்பாடி பழனிசாமி!
மதுரை: எடப்பாடி பழனிசாமி முகாமில் இருந்து உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வை தங்கள் பக்கம் இழுத்தது போல், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை இழுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய் நகர்த்தி வருகிறது.
இதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட நிலையில் நைஸாக நழுவிச் செல்வதில் குறியாக இருக்கிறாராம் செல்லூர் ராஜூ.
இதனிடையே உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனை போல் இனி யாரும் ஓ.பி.எஸ்.பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கண் கொத்தி பாம்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளது.

அதிமுகவில் அதிகாரம்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுகவில் யார் பெரியவர் என்ற அதிகார மோதல் உருவாகியிருப்பதால் அக்கட்சி கடந்த இரண்டு மாதங்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்கியிருப்பதால் இப்போது அவரது தரப்பு சற்று உற்சாகமாக வலம் வருகிறது. அதே உற்சாகத்தோடு எடப்பாடி பழனிசாமி பக்கமிருந்து சில முக்கியப் பிரமுகர்களை ஓபிஎஸ் பக்கம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

செல்லூர் ராஜூ
அந்த வகையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து தாவி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூவை ஓ.பன்னீர்செல்வம் பக்கம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டும் அவர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக ஒதுங்கி வருகிறாராம். இருப்பினும் ஓபிஎஸ் டீம் சமுதாய பிரமுகர்கள் மூலம் தூண்டில் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறி மதுரைக்கு
ஆர்.பி.உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து விமர்சித்து பேசுவதால் அவரது மதுரை மாவட்டத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுத்து தங்களின் பலம் என்ன என்பதை காட்ட வேண்டும் என்பதில் ரவீந்தரநாத் எம்.பி. உறுதியாக இருக்கிறாராம். இதனால் தான் ஆர்.பி.உதயகுமாரின் டோனில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் சசிகலாவை சின்னம்மா என்றும் தினகரனை அண்ணன் என்றும் குறிப்பிட்டாராம்.

என்ன நிலைப்பாடு?
இதனிடையே செல்லூர் ராஜுவை பொறுத்தவரை என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதில் மிகவும் குழப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனை போல் இனி யாரும் ஓ.பி.எஸ்.பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தென் மாவட்ட நிர்வாகிகளை கண் கொத்தி பாம்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications