எங்களிடம் உள்ள ஒரே பிரச்சனை இது தான்! அதிமுகவிற்கு ஓனர் யார் என்பதில் போட்டி! -உதயநிதி ஸ்டாலின்
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் மகனாக, அண்ணனாக, தம்பியாக இருந்து உங்களுக்காக உழைப்பேன் என உதயநிதி பேச்சு.
மதுரை: தங்களிடம் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், செய்வதை மக்களிடம் சொல்வதில்லை என்பது தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓனர் யார் என்று முடிவெடுப்பதில் அதிமுகவினர் மும்முரமாக இருக்கிறார்கள் என கலாய்த்தார்.
மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும் அந்த நிகழ்வில் உதயநிதி பேசியதாவது;

ஒரே பிரச்னை
''எங்களிடம் உள்ள ஒரே பிரச்னை, செய்வதை மக்களிடம் சொல்வதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகள் வாட்ஸ்அப் வதந்திகளாக எங்களுக்கு முன்னால் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. இந்த 21 மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு இருந்தபோது என்ன செய்தது. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜானாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது. தடுமாறிக் கிடந்த தமிழ்நாட்டு அரசை தலைநிமிரச் செய்தவர் நம் முதலமைச்சர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றால் அது மிகையல்ல.''

எதிர் நீச்சல்
''பெண்கள் என்பவர்கள் படிப்பிலும், உழைப்பிலும் ஆண்களைவிட ஒரு படி மேல் இருக்கிறீர்கள். தோல்வியை வெற்றியாக்கும் மனவலிமை உங்களுக்குத்தான் இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு முன்னேற நினைக்கும் உங்களுக்கு, எதிர் நீச்சல் போட உதவும் துடுப்பாகத்தான் இந்த கடனுதவிகளைப் பார்க்கிறேன்.''

ஓனர் யார்?
''பெண்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆண்களைவிட நீங்கள் தெளிவாக புரிந்துகொள்வீர்கள். நீங்க எல்.ஐ.சி-யில் முதலீடு செய்த பணம் காற்றிலேயே காணாமல் போய்கொண்டு இருக்கிறது. குஜராத்தில் நடந்தது என்ன என யூ-டியூப்ல ஒரு ஆவணப்படத்தை வெளியிட முடியலை. உங்க வீட்டு காஸ் கனெக்ஷனுக்கு மானியம் வருவதில்லை. இதையெல்லாம் கேட்க இங்குள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களும் வர்றதில்லை, ஓனர் யார் என்று முடிவெடுப்பதில் அவர்கள் மும்முரமாக உள்ளார்கள். ''

உங்கள் வீட்டுப் பிள்ளையாக
''மகளிர் சுயஉதவிக்குழுவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்.மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைக்கக்கூடிய துறையின் அமைச்சராகச் சொல்கிறேன், நான் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க தொடர்ந்து உழைப்பேன். என்றும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் மகனாக, அண்ணனாக, தம்பியாக இருந்து உங்களுக்காக உழைப்பேன் என்ற உறுதியையும் உங்களுக்கு அளித்து விடைபெறுகிறேன்.''
-
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications