திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக சேர்த்து வைத்த பணத்தில் மக்களை கூட்டி வருகிறார்கள், திமுக கூட்டத்திற்கு 50,000 பேர் வந்தாலே ஒரு லட்சம் பேர் வந்தார்கள் என்பார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சியின் மண்டலம் 2, 3, 4 மற்றும் 5 ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வணிகக் கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு, விதிகளுக்கு மாறாகச் சொத்து வரி குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2022 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகளின் ரகசியக் குறியீடுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்த வரிக்குறைப்பு ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு சுமார் ₹200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

AIADMK

இந்த ஊழல் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்: மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறி ஆகஸ்ட் 2025-இல் கைது செய்யப்பட்டார் (பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்).
இந்த விவகாரத்தில் முன்னாள் உதவி ஆணையர் சுரேஷ் குமார் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மார்ச் 12ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை காமராஜர் சாலை பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது . இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.

மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் மகாலில் செல்லூர் ராஜூ பேட்டியின் போது கூறுகையில், " 5 மாதங்களாக மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடத்தவில்லை. 69 திமுக உறுப்பினர்கள் இருந்தும் ஒரு மேயர் தேர்வு செய்ய முடியவில்லை.

திருச்சியில் இன்று திமுக மாநாடு நடத்துவது குறித்த கேள்விக்கு, 20 லட்சம் பேர் கூட வருவதாக சொல்வார்கள், 50 ஆயிரம் பேர் வந்தாலும் லட்சம் பேர் வந்ததாக சொல்வார்கள். 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு விடியாத ஆட்சியை தந்து விட்டார்கள். சேர்த்து வைத்த பணத்தில் மக்களை கூட்டுகிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில், வரும் 12ம் தேதி மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ,200 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மக்களின் வரிப்பணத்தை உரையாடிய மாநகராட்சி கண்டித்து சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

ஐந்து மாதமாக மேயர், மண்டல தலைவர் நியமிக்கப்படவில்லை. மாதமாதம் நடைபெறும் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனால் மக்களின் குறைகளை தெரிவிக்க முடியவில்லை.

ஐந்து மாதங்களாக இந்த மாநகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. 69 போன்ற உறுப்பினர்கள் இருந்தும் இதுவரை மேயர் மண்டல தலைவர் அறிவிக்கவில்லை. அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

அதிமுக கட்சியின் மதுரையின் நகர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+