குலதெய்வம் சத்தியமாக.. அஜித் குமாரை விசாரிக்க டெல்லி அதிகாரியிடம் பேசினேனா? நிகிதா விளக்கம்!
மதுரை: அஜித் குமார் விவகாரத்தில் குலதெய்வம் சத்தியமாக எந்த உயரதிகாரிகளிடமும் உதவி கோரவில்லை என்று நகை திருடுபோனதாக புகார் அளித்துள்ள நிகிதா தெரிவித்துள்ளார். நகையை காணவில்லை என்ற புகாரில் எந்த பொய்யையும் கூறவில்லை என்று கூறிய நிகிதா, டெல்லியிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ எந்த உயர் அதிகாரியையும் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் சித்ரவதையால் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். மடப்புரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் தங்களின் 9 சவரன் நகையை காணவில்லை என்று அளித்த புகார் காரணமாக, அஜித் குமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதன்பின் அஜித் குமார் கொல்லப்பட்ட நிலையில், நிகிதா மீது பல்வேறு பண மோசடி புகார் எழுந்தது.

நிகிதா விளக்கம்
ஒரு கட்டத்தில் நிகிதா கோவையில் தலைமறைவாகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நிகிதா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் நிகிதா பேசுகையில், காவல்துறையில் எந்த உயர் அதிகாரியையும் எனக்கு தெரியாது. அவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்திருந்தால், காவல் நிலையத்தில் மதியம் 2.30 மணி முதல் 8 மணி வரை கொசுக்கடியில் அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
குலதெய்வம் சத்தியமாக..
டெல்லி அதிகாரி, தலைமைச் செயலக அதிகாரி என்று யாரையும் எனக்கு தெரியாது. சோசியல் மீடியாவில் நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன். நகை திருடுபோன சம்பவம் தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. எந்த அதிகாரிக்கும் தொலைபேசி மூலமாக அழைத்து உதவி கேட்கவில்லை. ஏனென்றால் எந்த அதிகாரியையும் எனக்கு தெரியாது. புகார் கொடுத்த பின், சனிக்கிழமையன்று சில விஷயங்களை சொன்னார்கள்.
சந்தேகம் வந்தது ஏன்?
அஜித் குமார் ஏதாவது சொன்னாரா என்று கூட எந்த தகவலும் கூறவில்லை. புகாரில் நான் எந்த பொய்யையும் கூறவில்லை. அஜித் குமாரிடம் மட்டும்தான் கார் கொடுத்துள்ளேன். அதனால் சந்தேகம் வந்தது. தனிப்படை காவலர்களுக்கும், காவலர்களுக்கும் இடையிலான வித்தியாசம் கூட தெரியாது. அஜித் குமார் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தவறான விஷயம்.
மன்னிப்பு கேட்ட நிகிதா
அவரின் தாய் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அஜித் குமாரிடம் மன்னிப்பு கோருகிறேன். அவரின் தாயாரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அஜித் குமாருடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எடுத்திருப்பார் என்பது சந்தேகம் தான். அவரை துன்புறுத்துங்கள், அழுத்தம் கொடுங்கள் என்று குலதெய்வம் சத்தியமாக செய்யவில்லை. இப்படியொரு விஷயம் நடக்கும் என்பது தெரியாது.
நகை என்னுடையது அல்ல
நான் இருக்கும் போது அஜித் குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அஜித் குமார் உயிரிழந்தது குறித்து எங்களுக்கும் எதுவும் சொல்லவே இல்லை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென போலீசார் வந்து, டிஎஸ்பி அழைக்கிறார் என்று கூறினார்கள். பின் என்னிடம் விசாரிக்க விரும்புவதாக கூறினார்கள். புகார் கொடுக்கும் போது சொன்னது இதுதான். நகை அம்மா உடையது.
என் அம்மா அழுதுவிட்டார்
இதன்பின் எங்களை காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். அங்கு போன பின் நீதிபதி புறப்பட்டு சென்றுவிட்டார்கள் என்றனர். தொடர்ந்து மாஜிஸ்திரேட்டை சந்தித்து விசாரணையில் அனைத்தையும் கூறினோம். அதுவரை நகை பற்றி எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து, அஜித் குமார் உயிரிழந்துவிட்டார் என்று அதிர்ச்சி கொடுத்தனர். அதனை கேட்டு என் அம்மா மகனே என்று அழுக தொடங்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications