அஜித் குமார் லாக் அப் மரணம்.. நிகிதா அளித்தது பொய் புகார்.. நீதிமன்றத்தில் வெளி வந்த அதிர்ச்சி!
மதுரை: மடப்புரம் காவலாளி அஜித்குமார் லாக் அப் மரண வழக்கில், நகை திருடப்பட்டதாக நிகிதா அளித்த புகார் பொய் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டு புகாரின் பெயரில் அஜித்குமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த விசாரணையின் போது காவல் துறை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அஜித்குமார் மரண வழக்கு
அதேபோல் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனிடையே அஜித்குமார் மரண வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஜூலை மாதத்தில் இருந்தே சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கைதான காவலர்கள் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ பதில்
அதில் சிபிஐ, அஜித்குமார் மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர், தனிப்படை காவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஸ்ரீமதி, நகை திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது உண்மையா என்று கேள்வி எழுப்பினார்.
நிகிதா அளித்த புகார் பொய்
அப்போது சிபிஐ தரப்பில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். . அந்த புகார் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. அதுதொடர்பான 90 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர். இதன்பின் நீதிபதி, ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர்.
நீதிபதி வேதனை
புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? மனம் பதறுகிறது. முன்விரோதம் எதுவும் இல்லாமல் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது மனவேதனையை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும். யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும் என்று கூறி இருக்கிறார்.
நிகிதா மீது நடவடிக்கை
இதன்பின் வழக்கு பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பேராசிரியை நிகிதா மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் மரணம் அடைந்த போதே நகை திருட்டு புகார் தொடர்பான உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது நகை திருடப்பட்டதாக அளிக்கப்பட்டது பொய்ப் புகார் என்பது தெரிய வந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications